| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும், லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன். 21 | ஆபாத சூட மநுபூய ஹரிம் ஸயாநம் மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா | அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிஸ்சிகாய மநவை முநிவாஹநம் தம் || | Ya:, ய: - யாவரொரு திருப்பாணாழ்வார் Kaverathu hithu:, கவேரது ஹிது: - திருக்காவிரியின் Madhye, மத்யே - நடுவில் Sayaanam, ஸயாநம் - திருக்கண் வளர்ந்தருளுகிற Harim, ஹரிம் - ஸ்ரீரங்கநாதரை Aapaatha soodam, ஆபாத சூடம் - திருவடி தொடங்கித் திருமுடியளவாக Anubooya, அநுபூய - அநுபவித்து Mudhi thantharathma, முதி தாந்தராத்மா - உகந்தவராய் Nayanayo: Vishyaantharaanaam Adhrashtruthaam, நயநயோ: விஷயாந்தராணாம் அத்ரஷ்ட்ருதாம் - (தமது) திருக்கண்கள் (அப்பெருமானைத் தவிர) மற்றொன்றையும் காணமாட்டாமையை Nischikaya, நிஸ்சிகாய - அறுதியிட்டருளினாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Munivaahanam, முநிவாஹநம் - லோக ஸாரங்க மஹாமுநியை வாஹநமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை Manavai, மநவை - சிந்திக்கக்கடவேன் |
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம் 22 | காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ் செவ்வாய் வாட்டமில் கண்கள்மேனி முனியேறித் தனிபுகுந்து பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே | Muni eri, முனி ஏறி - லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி Thani pugundhu, தனி புகுந்து - தனியே உள்ளே புகுந்து Kaatave kanda, காட்டவே கண்ட - (எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட Paadha Kamalam, பாத கமலம் - திருவடித் தாமரைகளும் Nal aadai, நல் ஆடை - சிறந்த திருப்பீதாம்பரமும் Undhi, உந்தி - திருநாபியும் Thetarum, தேட்டரும் - கிடைத்தற்கு அரிதான UdharaBandham, உதரபந்தம் - பொன்அரைநாணும் Thirumaarvu, திருமார்வு - பிராட்டி வாழ்கிற மார்பும் Kandam, கண்டம் - திருக்கழுத்தும் Sevvaai, செவ்வாய் - சிவந்த வாயும் Vaattam il, வாட்டம் இல் - சோர்வுஇல்லாத Kangal, கண்கள் - திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய) Meni, மேனி - திருமேனியை Paattinaal kandu vaazhum, பாட்டினால் கண்டு வாழும் - பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த Paanar, பாணர் - திருப்பாணாழ்வாருடைய Thaal, தாள் - திருவடிகளை Paravinome, பரவினோமே - துதிக்கப்பெற்றோம் |