| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | பொது தனியன்கள் || (இப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார்) 1 | ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் | யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் || | Sri Sailesha,ஶ்ரீசைலேச - “ஶ்ரீசைலேசர்” என்கிற ஸ்வாமி ஸ்ரீதிருவாய்மொழிப் பிள்ளையின் Dhayapathram,தயாபாத்ரம் - எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும் Theepakyaadhi,தீபக்யாதி - பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற Gunarnavam,குணார்ணவம் - குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் Yadhinthira Pravanam,யதீந்திர ப்ரவணம் - யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான Vandhe Ramya Jamadaram Munim,வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் - அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன் |
| 0 | பொது தனியன்கள் || (இதில், என் ஆசார்யர் என ஆழ்வான் இராமாநுசரை வைத்துப் பாடியுள்ளார். இதை அநுஸந்திக்கும் ஒவ்வொருவரும் தமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய தத்தம் ஆசார்யரை நினைந்து துதிப்பது க்ரமமாகும்) 2 | லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் | அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் || | Lakshmi Natha Samarampaam,லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் - மஹாலக்ஷ்மியின் நாதனாகிய நாராயணனைத் தொடக்கமாகவும் Nathayaamuna Madhyamaam,நாதயாமுந மத்யமாம் - நாத முனிகள் ஆளவந்தாரை நடுவாகவும் Asmathaacharya Paryanthaam,அஸ்மதாசார்ய பர்யந்தாம் - என் ஆசார்யனை ஈறாகவும் Vandhe Guruparamparaam,வந்தே குருபரம்பராம் - உடைய குரு பரம்பரையை வணங்குகிறேன் |
| 0 | பொது தனியன்கள் || (அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும், அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்) 3 | யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே | அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே || | Yo Nithyam,யோ நித்யம் - எப்பொழுதும் Asyudha,அச்யுத - அச்யுதனின் Padambhuja Yukma Rukma,பதாம்புஜ யுக்ம ருக்ம - பொன் போன்ற இரண்டு திருவடித் தாமரைகளில் Asmath Kuroor,அஸ்மத் குரோர் - அஞ்ஞானத்தை போக்குபவரே குரு Thrunaayamene, த்ருணாயமேநே - மிகவும் அற்பமான புல்லுக்கு சமமான Vyamohatas Tathitarani, வ்யாமோஹதஸ் ததிதராணி - எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் Bhagavathosya,பகவதோஸ்ய - ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் உடையை அத்தகைய பகவானும் Dhayaka Sindho,தயைக ஸிந்தோ - கருணைக் கடலேபோல் Ramanujasya Charanau Charanam Prapadye,ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே - ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம் |
| 0 | பொது தனியன்கள் || (ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்) 4 | மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம் ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம் ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா | Maatha, மாதா - உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது,பெருகைக்கு வருந்தி, பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி, பிரசவ வேதனையை அனுபவித்து, அஸூத்திகளையும் மதியாதே, பால்ய தசையிலே ஆதரித்து, பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து, அகல இசையாதே அவன் பிரியத்தையே வேண்டும் - மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை Pitha, பிதா - அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் , என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும் Yuvathayas, யுவதயஸ் - இருவரையும் மறந்து விரும்பும், யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை Thanaya, தனயா - அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய், பால்யத்தில் ஸூககரனாய், பக்வ தசையில் ரஷகனாய், ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான, புத் என்னும் நரகத்தை தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை Vibhoothi, விபூதி - விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே, இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை Sarvam, சர்வம் - அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை Yatheva, யதேவ - அவதாரணத்தால்- சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே Niyamena, நியமேன - என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய, ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை Madanavyanaam, மதநவ்யாநாம் - இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும் ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று Aathyasya, ஆத்யஸ்ய - வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை Na Kulapather, ந குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷிகளும் அவரே என்கை Vakulaabi raamam, வகுளாபி ராமம் - திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை - மகிழ் அலங்காரமான திருவடிகள் (மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்) Sri matha, ஸ்ரீ மத - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை Thathangri yugalam, ததங்க்ரி யுகளம் - அது -என்னும் அத்தனை ஒழிய பேசி முடிக்க ஒண்ணாது -என்கை Yugalam, யுகளம் - சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை Pranamaami moorthna, ப்ரணமாமி மூர்த்நா - ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே நம -என்று நிற்க மாட்டாதே அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் |
| 0 | பொது தனியன்கள் || நிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும் அவர்களுக்கு சேஷ பூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் 5 | பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான் பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம் | Bootham, பூதம் - பூதத்தார் (பூதத்தாழ்வார்) Sarasya, சரஸ்ய - பொய்கையார் (பொய்கையாழ்வார்) Mahathahvaya, மஹதாஹ்வய - பேயன் (பேயாழ்வார்) Patta naatha, பட்ட நாத - பட்டர் பிரான் (பெரியாழ்வார்) Sri, ஸ்ரீ - ஆண்டாள் Bhakthi saara, பக்தி சார - பக்திசாரர் (திருமழிசையாழ்வார்) Kulasekara, குலசேகர - ஸ்ரீ குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) Yogi vaahaan, யோகி வாஹான் - முனி வாஹரான பாண் பெருமாள் (திருப்பாணாழ்வார்) Bhakthangri renu, பக்தாங்க்ரி ரேணு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் Parakaala, பரகால - மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் (திருமங்கையாழ்வார்) Yathindra mishraan, யதீந்திர மிஸ்ரான் - எதித்தலை நாதனான எம்பெருமானார் (எதிராசர்), மிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் - அத்தாலே சடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான மதுரகவிகளை சொல்லுகிறது என்னுதல் (மதுரகவி ஆழ்வார்) Sri math Paraangusa munim, ஸ்ரீ மத் பராங்குச முநிம் - பராங்குசர் (நம்மாழ்வார்) Pranathosmi nithyam, பிரணாதோஸ்மி நித்யம் - நித்யம் பிரணத: அஸ்மி (தினமும் இந்த மகான்கள் உடைய சங்கத்தை வணங்குகிறேன்) |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது ) 6 | குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி | Guru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ Vedhan,வேதான் - வேதங்களை Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால் Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய் Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும் Amara,அமர - தேவதைகளால் Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும் Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய் Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை Namami,நமாமி - சேவிக்கிறேன் |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது) 7 | மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து | Min,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்) Ar,ஆர் - நிறைந்த அதிகமான Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள Mathil,மதிள் - திரு மதிளாலே Soozh,சூழ் - வளைக்கப்பட்ட Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம் Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில் Kizhi,கிழி - பொருள் முடிப்பை Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால் Keezhmai,கீழ்மை - நரகத்தில் Ini,இனி - இனிமேல் Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற Vazhi,வழி - மார்க்கத்தை Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம் Nenje,நெஞ்சே - மனசே Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது) 8 | பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று | Pandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன் Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன் Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு Ootha,ஊத - அநேகர் சப்திக்க Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை Oodhi,ஓதி - தெரியச் சொல்லி Viraindhu,விரைந்து - தாமசியாமல் Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய Paadhangal,பாதங்கள் - திருவடிகளே Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய Patru,பற்று - ஆதாரம் |
| 0 | திருப்பாவை- தனியன் || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த நமஸ்காரமானது காலம் உள்ளவரை ஆகவேண்டும். 9 | நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: || | Neelaathunga sthanagirithati suptham, நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் - நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலைச்சாரலில் கண்வளர்ந்தருளுமவனை Svochishtaayaam, ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் களையப்பட்ட Sraji, ஸ்ரஜி - மாலையிலே Nigalitham, நிகளிதம் - விலங்கிடப்பட்டவனுமான Krishnam, க்ருஷ்ணம் - கண்ணபிரானை Udhpodhya, உத்போத்ய - திருப்பள்ளி யுணர்த்தி Sruthi satha siras sitham, ஸ்ருதி சத சிரஸ் சித்தம் - பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்த ஸித்தமான) Svam, ஸ்வம் - தன்னுடையதான Paararthyam, பாரார்த்யம் - பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) Adyaapayanthi, அத்யாபயந்தீ - அறிவியா நின்றவளாய் Yaa palaathkruthya, யா பலாத்க்ருத்ய - எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை Pungthe, புங்க்தே - (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ Godha thasyai, கோதா தஸ்யை - அப்படிப்பட்ட பெருமையை யுடையளான ஆண்டாளின்பொருட்டு Booyo Booya Eava, பூயோபூய ஏவ - காலதத்துவ முள்ளதனையும் Idham idham Nama, இதம் இதம் நம: - இந்த இந்த நமஸ்காரமானது Asthu, அஸ்து - ஆயிடுக |
| 0 | திருப்பாவை- தனியன் || அன்னங்கள் உலாவும் வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதை இனிய இசையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய பாமாலையாக ஸமர்ப்பித்தாள். பூக்களால் ஆன மாலையையும் தான் முதலில் சூடி பின்பு அந்த எம்பெருமானுக்கு அதை ஸமர்ப்பித்தாள். அப்படிப்பட்ட பெருமையை உடைய ஆண்டாள் நாச்சியாரைப் பாடு 10 | அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு | Annam vayal, அன்னம் வயல் - ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களையுடைய Pudhuvai, புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த) Andal, ஆண்டாள் - ஆண்டாள்' என்னுந் திருநாமத்தை யுடையளும் Pannu, பன்னு - ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட Thirupavai pal pathiyam, திருப்பாவை பல் பதியம் - திருப்பாவையென்னும் பல பாசுரங்களை In isaiyaal, இன் இசையால் - இனிய இசையுடன் Paadi, பாடி - பாடி (அவற்றை) Arangarku, அரங்கற்கு - ஸ்ரீரங்கநாதனுக்கு Nal paa maalai, நல் பா மாலை - விலக்ஷணமான பாமாலையாக Koduthaal, கொடுத்தாள் - ஸமர்ப்பித்தவளும் Poomaalai, பூமாலை - (செண்பகம் முதலிய) பூக்களினாலாகிய மாலையை Soodi, சூடி - (தான் முந்துறக் குழலிற்) சூடி Koduthaalai, கொடுத்தாளை - (பிறகு ரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை Sol, சொல் - அநுஸந்திக்கக் கடவை |
| 0 | திருப்பாவை- தனியன் || பூக்களால் ஆன மாலையைத் தான் சூடிப் பின்பு எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த ஒளி விடும் கொடியைப் போன்றவளே! பலகாலமாக அனுஷ்டிக்கப்படும் பாவை நோன்பைத் திருப்பாவை மூலமாக அருளிச்செய்த, திருக்கைகளில் வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனைக் குறித்து “என்னைத் திருவேங்கடமுடையானுக்கு ஆட்படுத்த வேண்டும்” என்று கூறியதை, நாங்கள் அவனிடத்திலே கூற வேண்டாதபடி நீயே எங்களுக்கு அருள்புரிவாயாக. 11 | சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு | Soodik kodutha, சூடிக் கொடுத்த - (பூமாலையைத் திருக்குழலிற்)சூடி (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த Sudar kodiye, சுடர் கொடியே - தேஜோ மயமான கொடிபோன்றவளே! Thol paavai, தொல் பாவை - அநாதி ஆசார ஸித்தமான நோன்பை Paadi, பாடி - (திருப்பாவை முகமாகக்) கூறி Arula valla, அருள வல்ல - (அடியார்திறத்துக்) கருணைபுரிய வல்லவளும் Pal valaiyaai, பல் வளையாய் - பல வளைகளை அணிந்துள்ளவளுமான கோதாய்! Nee, நீ - நீ Naadi, நாடி - (மன்மதனை) நாடி Ennai Vengadavar ku vidhi endra I maatram, என்னை வேங்கடவற்கு விதி என்ற இ மாற்றம் - ("காமதேவா! நீ என்னைத் திருவேங்கடமுடையானுக்கு வாழ்க்கைப் படுத்தவேணும்'' )என்று (காமனைக் குறித்துக்) கூறிய கூற்றை Naam kadavaa vannam, நாம் கடவா வண்ணம் - யாம் மீறாதொழியுமாறு Nalku, நல்கு - அருள்புரிவாயாக |
| 0 | நாச்சியார் திருமொழி- தனியன் || புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், இடையர் குல வேந்தனான கண்ணன் எம்பெருமானின் திருமேனிக்கு ஒத்தவளாகவும், அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலே அந்தணர் குலத்தலைவரான பெரியாழ்வார் பெற்றெடுத்த விளக்காகவும் திகழ்கின்றாள் 12 | அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் ஆயர் குல வேந்தனாகத்தாள் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு. | Alli, அல்லி - இதழ்களுடைய Naal Thaamarai mel, நாள் தாமரை மேல் - அப்போதலர்ந்த தாமரைப்பூவில் Aar, ஆர் - பொருந்தி யிராநின்ற Anangin, அணங்கின் - தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியார்க்கு In thunaivi, இன் துணைவி - இஷ்டஸகியாயும் Malli naadu, மல்லி நாடு - மல்லிநாட்டை Aanda, ஆண்ட - (குணத்தாலே ஈடுபடுத்தி) ஆளாநின்ற Madam mayil, மடம் மயில் - அழகிய மயில் போன்றவளாயும் Mel iyalaal, மெல் இயலாள் - மென்மைத் தன்மையுடையவளுமான ஆண்டாள் Aayar kulam vendhan, ஆயர் குலம் வேந்தன் - இடைக் குலத்திற்குத் தலைவனான கண்ணபிரானுடைய Aagathaal, ஆகத்தாள் - திருமேனியிற் பொருத்தமுடையவளாயும் Then Pudhuvai veyar, தென் புதுவை வேயர் - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலே வேயாகுலத்துதித்தவரான பெரியாழ்வாராலே Payantha, பயந்த - பெறப்பட்ட Vilakku, விளக்கு - விளக்காயும் இராநின்றாள் |
| 0 | நாச்சியார் திருமொழி- தனியன் || அழகிய சுரியுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தைப் பார்த்து ஆச்சர்ய செயல்களை உடைய எம்பெருமானின் சிவந்த திருவதரத்தின் சுவையை விசாரிக்கும் பெருமையை உடையவளும், அழகிய திருமல்லி நாட்டின் தலைவியும், தன்னுடைய அழகிய கூந்தலில் சூடிக்களைந்த பூமாலையைத் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையை உடையவளும், சோலையில் இருக்கும் கிளி போன்றவளுமான ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையும் இனிமையும் பொருந்திய திருவடிகளே நமக்குப் புகலிடம். 13 | கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக் கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே | Kolam surisangai, கோலம் சுரிசங்கை - அழகையும் சுரியையுமுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை நோக்கி Maayan, மாயன் - கண்ண பிரானுடைய Sevvaayin gunam, செவ்வாயின் குணம் - சிவந்த திருவதரத்தின் அதிசயத்தை Vinavum seelathanal, வினவும் சீலத்தனள் - கேட்கும் தன்மை யுடையவளும் Then, தென் - தென் திசையிலுள்ள Thirumalli naadi, திருமல்லி நாடி - திருமல்லி நாட்டிற்குத் தலைவியும் Sezhum, செழும் - செழுமை தங்கிய Kuzhalmel, குழல்மேல் - ( தனது ) திருக்குழற்கற்றையில் (சூட்டப்பெற்ற) Maalai thodai, மாலைத் தொடை - கலம்பக மாலையை Then Arangarkku, தென் அரங்கருக்கு - அழகிய மணவாளனுக்கு Eeyum mathippu udaiya, ஈயும் மதிப்பு உடைய - ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையுடையவளும் Solai kili aval, சோலை கிளி அவள் - சோலையில் வளரும் கிளிபோல் இனிய மொழியையுடையவளுமான ஆண்டாளின் Thooya nal paadham, தூய நல் பாதம் - பாவனமும் போக்யமுமான திருவடிகள் Namakku, நமக்கு - நமக்கு Thunai, துணை - தஞ்சம் |
| 0 | பெருமாள் திருமொழி - தனியன் || (இன்னமுதமூட்டுகேன்) 14 | இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள் குலசேகரன் என்றே கூறு | Paing kiliye, பைங் கிளியே - பசுமைதங்கிய கிளியே! In amudham ootuken, இன் அமுதம் ஊட்டுகேன் - (உனக்கு) இனிமையான அம்ருதம் உண்ணத் தருகிறேன் Inge vaa, இங்கே வா - என்னருகே வருவாயாக Then arangam, தென் அரங்கம் - தென் திருவரங்கத்தைக் குறித்து Paada valla, பாட வல்ல - (இனிய கவிகளை) அருளிச் செய்யவல்ல Seer, சீர் - கல்யாண குணசாலியான Perumal, பெருமாள் - மஹாநுபாவர் Pon am silai ser, பொன் அம் சிலை சேர் - விரும்பத்தக்கதாய் அழகியதான புருவத்தை நெற்றியிலேயுடைய Nuthaliyar vel, நுதலியர் வேள் - மாதர்கட்கு மநோஹாரானவர் Seralar kon, சேரலர் கோன் - சேர வம்சத்தவர்களுக்கெல்லாம் ராஜா Engal Kulasekaran, எங்கள் குலசேகரன் - ப்ரபந்நரான நம்முடைய குலத்துக்குச் சிரோபூஷணமான குலசேகராழ்வார் Endre kooru, என்றே கூறு - என்று இதையே நீ வாய்பிதற்ற வேணும் |
| 0 | பெருமாள் திருமொழி - தனியன் || (ஆரம் கெடப்பரனன்பர்) 15 | ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன் சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே | Aaram keda, ஆரம் கெட - நவரத்தின மாலையொன்று கெட்டுப்போக (அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ததாகக் கள்ள மந்திரிகள் கூற) Avargalukke vaaram kodu, அவர்களுக்கே வாரம் கொடு - அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே பக்ஷபாதம் பூண்டு Paran enbar kollaar endru, பரன் என்பர் கொள்ளார் என்று - பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்யமாட்டார்கள் என்று சொல்லி Kudappaambil kai ittavan, குடப்பாம்பில் கை இட்டவன் - பாம்புக்குடத்தில் கையிட்டருளியவர் Maatralarai, மாற்றலரை - சத்துருக்களை Veeram keduthu kelkol, வீரம் கெடுத்து கெல்கோல் - பரிபவப்படுத்திய செங்கோன்மையை உடையவரும் Kolli kaavalan, கொல்லி காவலன் - கொல்லி என்கிற நகருக்கு நிர்வாஹகரும் Villavar kon, வில்லவர் கோன் - தநுர்வித்யை பயின்றவர்களில் தலைவரும் Seran, சேரன் - சேரதேசத்து அரசரும் Mudi vendhar sigamani, முடி வேந்தர் சிகாமணி - முடியுடை மன்னர்களிற் சிறந்தவருமான Kulasekaran, குலசேகரன் - குலசேகராழ்வாராவர் |
| 0 | திருசந்தவிருத்தம் - தனியன் || (தருச்சந்தப் பொழில்) 16 | தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே | Tharu sandham Pozhil thazhuvu tharaniyin, தரு சந்தம் பொழில் தழுவு தாரணியின் - வ்ருக்ஷங்களினுடைய அழகையுடைய சோலைகளாலே சூழப்பட்ட பூமியிலே உள்ளவர்களுடைய Thuyar theera, துயர் தீர - துக்கம் தீரும்படியாக Thiruchandha virutham sei, திருச்சந்த விருத்தம் செய் - திருச்சந்த விருத்தம்' என்னும் திவ்யப்ரபந்தத்தைச் செய்தருளிய Thirumazhisai paran varum oor, திருமழிசை பரன் வரும் ஊர் - திருமழிசைப்பிரான் திருவவதரித்த திவ்யதேசம் எதுவென்றால் Karu sandhum, கரு சந்தும் - பெருமை பொருந்திய சந்தன மரங்களும் Kaar akilum, கார் அகிலும் - கறுத்த அகிற்கட்டைகளும் Kamazh kongum, கமழ் கோங்கும் - மணம் மிக்க கோங்கு மரங்களும் Manam naarum, மணம் நாறும் - பரிமளம் வீசப் பெற்றதாய் Thiru, திரு - பெரிய பிராட்டியார் Sandhathudan, சந்தத்துடன் - அபிநிவேசத்தோடு Maruvu, மருவு - பொருந்தி வாழப்பெற்றதான Thiru mazhisai valam pathiye, திரு மழிசை வளம் பதியே - திருமழிசை என்னும் செல்வம் மிக்க திருநகரியே யாம் |
| 0 | திருசந்தவிருத்தம் - தனியன் || (உலகும் மழிசையும்) 17 | உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே வைத் தெடுத்த பக்கம் வலிது | Pulavar, புலவர் - ஸர்வஜ்ஞராகிய சதுர்முகர் Ulagum, உலகும் - (திருமழிசை தவிர மற்ற) எல்லா உலகங்களையும் Mazhisaiyum, மழிசையும் - திருமழிசையையும் Thammil ul unarnthu, தம்மில் உள் உணர்ந்து - தனித்தனியே தம் நெஞ்சில் ஆராய்ந்து (விஸ்வகர்மாவை கொண்டு) Pugazh kolaal thookka, புகழ் கோலால் தூக்க - துலாக்கோல் நாட்டி நிறுப்பிக்க Ulagu thannai vaithu edutha pakkathum, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் - உலகங்களை எல்லாம் வைத்து நிறுத்த தட்டிற்காட்டிலும் Maa neer mazhisai vaithu edutha pakkame validhu, மா நீர் மழிசை வைத்து எடுத்த பக்கமே வலிது - சிறந்த நீர்வளம் மிக்க திருமழிசையை வைத்து நிறுத்த தட்டே வலிமிக்கதாயிருந்தது |
| 0 | திருமாலை- தனியன் || (மற்றொன்றும் வேண்டா மனமே) இதில் மநஸ்ஸைக்குறித்து, பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த ஆழ்வார் திருநாமத்தை நிரந்தர அநுஸந்தாநம் பண்ணும்படி சொல்லுகிறது. 18 | மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர் கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம் பெருமானை யெப்பொழுதும் பேசு | Maname, மனமே - என் நெஞ்சமே! Madhil Arangar, மதிள் அரங்கர் - ஸப்த ப்ராகாரங்களையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரும் Kanru inam, கன்று இனம் - பசுக்கூட்டங்களை Meitha, மேய்த்த - மேய்த்தவருமான எம்பெருமானுடைய Kazhal inai keezh, கழல் இணை கீழ் - இரு திருவடிகளிலும Utra, உற்ற - ஊன்றிய பக்தியையுடையவரும் Thirumaalai paadum, திருமாலை பாடும் - திருமாலை' என்னும் பிரபந்தத்தைப் பாடுமவரும் Seer, சீர் - கல்யாண குணங்கள் பொருந்தியவரும் Thondar adi podi, தொண்டர் அடி பொடி - தொண்டரடிப்பொடி என அழைக்கப்படுமவருமான Em Perumaanai, எம் பெருமானை - எங்களுடைய ஸ்வாமியை Epozhuthum, எப்பொழுதும் - எல்லாக்காலத்திலும் Pesu, பேசு - அநுஸந்தித்துப்போரு Matru ondrum, மற்று ஒன்றும் - வேறு ஒரு புருஷார்த்தமும் Venda, வேண்டா - வேண்டுவதில்லை |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (தமேவ மத்வா) 19 | तमेव मत्वा परवासुदेव रङ्गेशयं राजत्रदर्हणीयम् । प्रावोधिक योऽकृत सूक्तिमालां भक्ताङ्किरेणुं भगवन्तमीडे ॥ தமேவ மத்வா பராஸுதேவம் ரங்கேயம் ராஜவதர்ஹணீயம் | ப்ராபோதிகீம் யோ≤க்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே || | Ya, ய: - யாவரொரு ஆழ்வார் Rajavath, ராஜவத் - அரசனைப் போல் Arhaniyam, அர்ஹணீயம் - பூஜிக்கத்தக்கவராய் Rangesayam, ரங்கேஸயம் - திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை Thamparavasudevam eva, தம்பரவாஸுதேவம் ஏவ - அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே Madhva, மத்வா - ப்ரதிபத்திபண்ணி Prabodhikeem, ப்ராபோதிகீம் - திருப்பள்ளியுணர்த்துமதான Sookthimalam, ஸூக்திமாலாம் - பாமாலையை Akrutha, அக்ருத - அருளிச்செய்தாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Bhagavantham, பகவந்தம் - ஞானம் முதலிய குணங்கள் Bhakthangrirenum, பக்தாங்க்ரிரேணும் - அமைந்த தொண்டரடிப்பொடியாழ் வாரை Eede, ஈடே - துதிக்கின்றேன் |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (மண்டங் குடியென்பர்) 20 | மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர் | Vandu, வண்டு - வண்டுகளானவை Thinartha, திணர்த்த - நெருங்கிப் படிந்திருக்கப் பெற்ற Vayal, வயல் - கழனிகள் சூழ்ந்த Then, தென் - அழகிய Arangathu, அரங்கத்து - திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற) Ammanai, அம்மானை - பெரிய பெருமாளை Palli unarthum, பள்ளி உணர்த்தும் - திருப்பள்ளியுணர்த்துமவராய் Piran, பிரான் - பரமோபகாரகராய் Thondaradipodi, தொண்டரடிப்பொடி - தொண்டரடிப் பொடி என்னுந் திருநாமமுடையரான ஆழ்வார் Udhitha oor, உதித்த ஊர் - திருவவதரித்த திவ்ய தேசமானது Maa maraiyor, மா மறையோர் - சிறந்த வைதிகர் கள் Manniya, மன்னிய - பொருந்தி வாழத்தகுந்த Seer, சீர் - சீர்மையையுடைய Mandangkudi, மண்டங்குடி - திருமண்டங்குடி என்கிற Thol nagaram, தொல் நகரம் - அநாதியான நகரமாகும் Enbar, என்பர் - என்று பெரியோர் கூறுவர் |
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும், லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன். 21 | ஆபாத சூட மநுபூய ஹரிம் ஸயாநம் மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா | அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிஸ்சிகாய மநவை முநிவாஹநம் தம் || | Ya:, ய: - யாவரொரு திருப்பாணாழ்வார் Kaverathu hithu:, கவேரது ஹிது: - திருக்காவிரியின் Madhye, மத்யே - நடுவில் Sayaanam, ஸயாநம் - திருக்கண் வளர்ந்தருளுகிற Harim, ஹரிம் - ஸ்ரீரங்கநாதரை Aapaatha soodam, ஆபாத சூடம் - திருவடி தொடங்கித் திருமுடியளவாக Anubooya, அநுபூய - அநுபவித்து Mudhi thantharathma, முதி தாந்தராத்மா - உகந்தவராய் Nayanayo: Vishyaantharaanaam Adhrashtruthaam, நயநயோ: விஷயாந்தராணாம் அத்ரஷ்ட்ருதாம் - (தமது) திருக்கண்கள் (அப்பெருமானைத் தவிர) மற்றொன்றையும் காணமாட்டாமையை Nischikaya, நிஸ்சிகாய - அறுதியிட்டருளினாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Munivaahanam, முநிவாஹநம் - லோக ஸாரங்க மஹாமுநியை வாஹநமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை Manavai, மநவை - சிந்திக்கக்கடவேன் |
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம் 22 | காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ் செவ்வாய் வாட்டமில் கண்கள்மேனி முனியேறித் தனிபுகுந்து பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே | Muni eri, முனி ஏறி - லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி Thani pugundhu, தனி புகுந்து - தனியே உள்ளே புகுந்து Kaatave kanda, காட்டவே கண்ட - (எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட Paadha Kamalam, பாத கமலம் - திருவடித் தாமரைகளும் Nal aadai, நல் ஆடை - சிறந்த திருப்பீதாம்பரமும் Undhi, உந்தி - திருநாபியும் Thetarum, தேட்டரும் - கிடைத்தற்கு அரிதான UdharaBandham, உதரபந்தம் - பொன்அரைநாணும் Thirumaarvu, திருமார்வு - பிராட்டி வாழ்கிற மார்பும் Kandam, கண்டம் - திருக்கழுத்தும் Sevvaai, செவ்வாய் - சிவந்த வாயும் Vaattam il, வாட்டம் இல் - சோர்வுஇல்லாத Kangal, கண்கள் - திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய) Meni, மேனி - திருமேனியை Paattinaal kandu vaazhum, பாட்டினால் கண்டு வாழும் - பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த Paanar, பாணர் - திருப்பாணாழ்வாருடைய Thaal, தாள் - திருவடிகளை Paravinome, பரவினோமே - துதிக்கப்பெற்றோம் |
| 0 | பெரிய திருமொழி - தனியன் || கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன் 23 | கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் யஸ்ய கோபி: ப்ரகாஸாபி ஆவித்யம் நிஹதம் தம: | யஸ்ய, yasya - யாரொருவருடைய ப்ரகாஸாபி, prakasapi - ஒளி படைத்ததான கோபி, gopi - கிரணம் (சூர்யகிரணம்), இவ்விடத்தில் திருமங்கை ஆழ்வாரின் ஒளி படைத்த பாசுரங்கள் ஆவித்யம், avidyam - அக்ஞானத்தாலே ஏற்பட்டதான, அக்ஞான ப்ரயுக்தம் (அறிவின்மையாகிற) தம, tama - அந்தகாரம் (இருளானது), உள் இருட்டானது நிஹதம், nihatham - போக்கபட்டதோ அப்படிபட்டவராய் கலித்வம்ஸம், kalithvamsam - கலி தோஷத்தை போக்கக்கூடியவரான லோக திவாகரம், loka divakaram - நாட்டாருக்கு சூரியனான கவிம், kavim - பரகால கவியை கலயாமி, kalayami - த்யானம் பண்ணுகிறேன் (நன்றியோடு நினைக்கிறேன்) |
| 0 | பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று) 24 | வாழிபரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல் | பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர் வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும் கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய) வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர் வாழி, vazhi - வாழி மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே) வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை கொள், kol - உபதேசிக்கபெற்றவராய் மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு கோன், kon - நிர்வாககராய் தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய சுடர், sudar - ஒளியையுடைத்தாய் மானம், maanam - மிகப்பெரியதான வேல், vel - வேலானது வாழி, vazhi - வாழ்ந்திடுக |
| 0 | பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின் பெருமை சொல்லுகிறது இது (இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஓதி உணர்ந்தால் மனனக மலங்களெல்லாம் அற்று ஹ்ருதயம் நிர்மலமாகும்; இந்த ஸ்ரீஸூக்திகளை ஓதுமவர்களுக்கு ”அண்டமாள்வதாணை” என்றபடி பரமபதம் ஸித்தமாதலால் ஸம்ஸாரத்தை அடியறுப்பவையாம் இவை; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாம் இவை; ஸகலவேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அர்த்தங்கள் இவ்வாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளில் சுருங்கக் காணலாயிருக்கையாலே வேதஸாரமுமாம் இவை; இந்த ஸ்ரீஸூக்திகள் அவதரித்தபின்பு பாஹ்யகுத்ருஷ்டி மதங்களெல்லாம் மாண்டுபோயினவாதலால் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாம் இவை) 25 | நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப் பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே! | பரகாலன், parakalan - ப்ரதிபக்ஷத்துக்கு (வேதத்திற்கு புறம்பானது) காலானான ஆழ்வார் அருளிச்செய்த பனுவல்கள், panuvalgal - பாட்டுக்களானவை நெஞ்சுக்கு, nenjukku - மனதில் இருக்கிற இருள், irul - இருட்டை, அக்ஞானத்தை கடி, kadi - போக்கவல்ல தீபம், deepam - விளக்காயும் அடங்கா, adanga - எதுக்கும் அடங்காத நெடும், nedum - நெடுகிபோகிற பிறவி, piravi - பிறப்பாகிற நஞ்சுக்கு, nanjukku - விஷத்துக்கு நல்ல, nalla - உயர்ந்த அமுதம், amudham - ச்லாக்யமான அம்ருதமாயும் நல், nal - விலக்ஷனமான தமிழ்நூல்துறைகள், tamizhlnoolthuraigal - திராவிட சாஸ்திர மார்க்கமான அஞ்சுக்கு, anjukku - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி (பஞ்சுலக்ஷனம்), 5 அடையாளங்களுக்கும் இலக்கியம், ilakkiyam - லக்ஷ்யமாயும் ஆரணம், aaranam - வேதத்தின் சாரம், saaram - சாரமாயும் பரசமய, parasamaya - இதர மதங்களான பஞ்சுக்கு, panjukku - பருத்திக்கு அனலின்பொறி, analinpori - நெருப்புப் பொறியாக இருக்கும் பரகாலனுடைய பாசுரங்கள் |
| 0 | பெரிய திருமொழி - தனியன் || எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் ( ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்) 26 | எங்கள் கதியே இராமாநுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா! | எங்கள் கதியே, engal kathiye - எங்களுக்கு அடைக்கலமாய் இருக்குமவரே இராமாநுச , Ramanuja - இராமாநுஜன் என்னும் திருநாமத்தையுடையவராய் முனியே, muniye - ஆத்மாக்களின் ரக்ஷனத்தை மனனம் பண்ணுபவரே சங்கை, sangai - வேத சாஸ்திரத்தில் இருக்கும் ஐயங்களை எல்லாம் கெடுத்து, keduthu - போக்கி ஆண்டு, aandu - எல்லாரையும் அடிமை கொண்டவரான தவராசா, thavarasa - எதிராஜரே பொங்கு, pongu - மிகுந்த புகழ், pugazh - பெருமையுடைய மங்கையர்கோன், mangaiyarkon - திருமங்கையில் உள்ளாருக்கு ராஜாவான திருமங்கையாழ்வார் ஈந்த, eendha - அருளிச்செய்த மறை, marai - வேத ரூபமான ஆயிரம் அனைத்தும், ayiram anaithum - ஆயிரம் பாட்டாக இருக்கும் பெரிய திருமொழி பிரபந்தமும், அனைத்தும் தங்கு மனம், thangu manam - தரித்திருக்கும்படியான மனதை நீ எனக்கு தா, nee enakku tha - அடியேனுக்கு, தேவரீர் தந்தருள வேண்டும் |
| 0 | பெரிய திருமொழி - தனியன் || ஸர்வேச்வரனைத் தனிவழியிலே வழிபறிக்க வேணுமென்று முயற்சி கொண்டு திருவரசடியிலே மறைந்திருந்த திருமங்கைமன்னனே!, வேற்படை யேந்திய திருக்கையாலே அடியேனுடைய பாவங்களைக் கண்டித்தொழிக்கவேணு மென்றதாயிற்று. 27 | மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று கோலிப்பத விருந்த கொற்றவனே! வேலை அணைத்து அருளும் கையால் அடியேன் வினையை துணித் தருள வேணும் துணிந்து | Maalai, மாலை - சர்வேஸ்வரனான வயலாளி மணவாளனை Thaniye vazhi, தனியே வழி - தனி வழியிலே Parikka venum, பறிக்க வேணும் - கொள்ளையடித்துவிட வேண்டும் Enru koli, என்று கோலி - முயன்று, ஆசைப்பட்டு Padha virunda, பத விருந்த - (அரச மரத்தடியிலே) பதுங்கி இருந்த Kotravane, கொற்றவனே - அரசனான திருமங்கை மன்னனே Velai, வேலை - வேல் என்னும் ஆயுதத்தை Anaithu arulum, அணைத்து அருளும் - அணைக்கும்படியான Kaiyaal, கையால் - திருக்கையாலே Adiyen, அடியேன் - சேஷபூதனான என்னுடைய Vinaiyai, வினையை - பாபங்களை Thunindhu, துணிந்து - துணிவையுற்று Thunith tharula venum, துணித் தருள வேணும் - வெட்டிக் களைந்தருள வேண்டும் |
| 0 | முதல் திருவந்தாதி - தனியன் || (கைதைசேர்) 28 | கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு வையத் தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற் றந்தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து | Kaithai, கைதை - தாழைகள் Ser, சேர் - நெருங்கிவர்த்திக்கிற Poo, பூ - அழகிய Pozhil, பொழில் - சோலைகளாலே Soozh, சூழ் - சூழப்பட்ட Kachi nagar, கச்சி நகர் - காஞ்சீநகரத்தில் (திருவெஃகாவிலே) Vandhudiththa, வந்துதித்த - (பொற்றாமரைப் பொய்கையிலே) திருவவதரித்தவராய் Kavingar poreru, கவிஞர்போரேறு - கவி ச்ரேஷ்டராய் Poigai piran, பொய்கைப் பிரான் - உபகாரகரான பொய்கையாழ்வார் Vaiyathu, வையத்து - பூமியிலுள்ள Adiyavargal, அடியவர்கள் - தாஸபூதரான ஸ்ரீவைஷ்ணவர்கள் Vaazha, வாழ - வாழும்படிக்கீடாக Arum, அரும் - (அர்த்த நிர்ணயம் செய்யப்புகில்) அரிதாய் Tamizh, தமிழ் - தமிழாகையாலே ஸுலபமாய் Nootranthaadhi, நூற்றந்தாதி - நூறுபாட்டாயிருக்கிற அந்தாதியை Parinthu, பரிந்து - ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு Padi, படி - பூமியிலே Vilanga seidhaan, விளங்கச்செய்தான் - ப்ரகாசமாகும்படி செய்தருளினார் |
| 0 | இரண்டாம் திருவந்தாதி - தனியன் || (என்பிறவி தீர ) 29 | என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா அன்பே தகளியளித்தானை - நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப் பூதத்தார் பொன்னங் கழல் | In, இன் - போக்யமான Amudha, அமுதா - அம்ருதமாக Anbethakali, அன்பேதகளி - அன்பேதகளி என்னும் ப்ரபந்தத்தை Alithan, அளித்தான் - க்ருபைசெய்து கொடுத்தவராய் Nal, நல் - ஸ்லாக்யமான Pugazh, புகழ் - கீர்த்தியை Ser, சேர் - அடைந்திருக்கிறதுமாய் Seethathaar, சீதத்தார் - குளிர்த்தியையுடைய Muthukkal, முத்துக்கள் - முத்துக்களானவை Serum, சேரும் - அடைந்திருக்கிறதுமான Kadalmallai, கடல்மல்லை - திருக்கடல்மல்லை என்கிற திவ்யதேசத்தில் அவதரித்த Boothaththaar, பூதத்தார் - பூதத்தாழ்வாருடைய Ponn am, பொன்அம் - மிகவும் ஸ்ப்ருஹணீயமான Kazhalai, கழலை - திருவடிகளை En, என் - என்னுடைய Piravi, பிறவி - ஸம்ஸாரம் Theera, தீர - நசிக்கைக்காக Irainjinen, இறைஞ்சினேன் - வணங்கினேன் |
| 0 | மூன்றாம் திருவந்தாதி - தனியன் || (சீராரும்மாட) (மநஸ்ஸே ! ஸம்பத்தினால் நிறைந்தும் மண்டபங்களையுடையதுமான திருக்கோவலூரென்கிற திவ்யதேசத்திற்குள் ஜலத்தினால் நிறைந்து கறுத்திருக்கிற மேகம் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனை அநுபவிக்கத் தொடங்கி ஆராய்ந்து திருக்கண்டேனென்று தொடக்கமான திருவந்தாதியை அருளிச் செய்த ஸ்ரீமானான பேயாழ்வாருடைய திருவடிகளை ஆசைப்பட்டு சொல்லுகிடாய்) 30 | சீராரும்மாடத் திருக்கோவலூரதனுள் காரார்கருமுகிலைக் காணப்புக்கு - ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே உரைக்கண்டாய்நெஞ்சே யுகந்து | Nenje, நெஞ்சே - எனது நெஞ்சமே! Seer aarum maadam, சீர் ஆரும் மாடம் - அழகு பொருந்திய மாடங்களையுடைய Thirukkovalur adhanul, திருக்கோவலூர் அதனுள் - திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் Kaar aar karu mugilai, கார் ஆர் கரு முகிலை - கார்காலத்துக் கரிய மேகம் போன்ற எம்பெருமானை Kaanapukku, காண புக்கு - ஸேவிக்கப் புகுந்து Oraa, ஓரா - நெஞ்சென்னும் உட்கண்ணாலே அநுஸந்தித்து Thirukkanden endru uraitha, திருக்கண்டேன் என்று உரைத்த - திருக் கண்டேன்' என்று தொடங்கி நூறுபாசுரம் அருளிச்செய்த Seeraan, சீரான் - சீர்மை பொருந்திய பேயாழ்வாருடைய Kazhale, கழலே - திருவடிகளையே Ugandhu urai kandai, உகந்து உரைக்கண்டாய் - மகிழ்ந்து பேசு |
| 0 | நான்முகன் திருவந்தாதி - தனியன் || (நாராயணன் படைத்தான்) 31 | நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தா னென்னும்சொல்- சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து | Narayanan, நாராயணன் - ஸ்ரீமந்நாராயணன் Naanmuganai, நான்முகனை - நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவை Padaithaan, படைத்தான் - ஸ்ருஷ்டித்தான் Naanmuganukku, நான்முகனுக்கு - அப்பிரமனுக்கு Er aar Sivan pirandhaan, ஏர் ஆர் சிவன் பிறந்தான் - ஸாதநாநுஷ்டாநத்தினால் பூர்ணனான சிவன் பிறந்தான் Ennum sol, என்னும் சொல் - என்னும் இவ்வார்த்தையைச்சொல்லுவதாய் Seer aar, சீர் ஆர் - பெருமைகள் பொருந்தப்பெற்றதான Mozhi seppi, மொழி செப்பி - இப் பிரபந்தத்தைச் சொல்லி Vaazhalam, வாழலாம் - வாழ்ச்சி பெறலாம் Nenjame, நெஞ்சமே - என் நெஞ்சே! Moi poo Mazhisai paran adiye, மொய் பூ மழிசை பரன் அடியே - பூக்கள் நிரம்பிய திருமழிசைப்பிரானுடைய திருவடிகளையே Vaazhthu, வாழ்த்து - மங்களாசாஸனம் செய்வாயாக |
| 0 | திருவிருத்தம் - தனியன் || (கரு விருத்தக்குழி) 32 | கரு விருத்தக்குழி நீத்த பின் காமக் கடுங்குழி வீழ்ந்து ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த திருவிருத்தத் தோரடி கற்று இரீர் திருநாட்டகத்தே | Karu, கரு - கர்ப்பஸ்தாநமாகிற Virutha, விருத்த - விருத்தமான (ஹேயமான) Kuzhi, குழி - பள்ளத்தில் நின்றும் Neetha pin, நீத்தபின் - நழுவினபின் Kaamam, காமம் - காமமென்கிற Kadum, கடும் - க்ரூரமான Kuzhi, குழி - பள்ளத்தில் Veezhndhu, வீழ்ந்து - விழுந்து (பிறகு) Oru virutham, ஒரு விருத்தம் - ஒரு கார்யத்திற்கும் யோக்யதையில்லாத கிழத்தனத்தை Pukku, புக்கு - அடைந்து Uzhaluvir, உழலுறுவீர் - திரிகிற ப்ராணிகளே Uyirin, உயிரின் - ஜீவாத்மாவாகிற Porulkatku, பொருள்கட்கு - வஸ்துக்களுக்கு Oru mirutham, ஒருமிருத்தம் - ஒரு துர்நடத்தையும் Pukuthamal, புகுதாமல் - சேராமற்படிக்கு Kurugaiyarkon, குருகையர்கோன் - திருநகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வார் Uraitha, உரைத்த - அருளிச்செய்த Thiruviruthathu, திருவிருத்தத்து - திருவிருத்தமென்கிற திவ்யப்ரபந்தத்தில் Oradi, ஓரடி - ஒருபாதத்தை Katru, கற்று - அப்யஸித்து Thirunattakathu, திருநாட்டகத்து - ஸ்ரீவைகுண்டத்தில் Ireer, இரீர் - (நிஸ்சிந்தராய்) இருங்கோள் |
| 0 | திருவாசிரியம் - தனியன் || (காசினியோர்) 33 | காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே | Kaasiniyor thaam, காசினியோர் தாம் - பூலோகத்திலுள்ளார் Vaazha, வாழ - உஜ்ஜீவிக்கும்படி Kaliyugathe, கலியுகத்தே - கலியுகத்தில் Vandhu, வந்து - (பரமபதத்தில்நின்றும்) வந்து Udhithu, உதித்து - அவதரித்து Aasiriyapaa athanaal, ஆசிரியப்பா அதனால் - ஆசிரியப்பா என்கிற பாக்களாலே Aru, அரு - அறிவதற்கரிதான Marai, மறை - வேதமாகிற Nool, நூல் - சாஸ்த்ரத்தை Virithaanai, விரித்தானை - விஸ்தரிக்கச் செய்தவராய் Desikanai, தேசிகனை - ஆசார்யராய் Thigazh, திகழ் - விளங்காநின்ற Vagulatharanai, வகுளத்தாரானை - மகிழம்பூமாலையை அணிந்தவரான Parangusanai, பராங்குசனை - நம்மாழ் வாரை Maasu adaiyaa, மாசு அடையா - அஹங்கார மமகாரங்களாகிற அழுக்குச் சேராத Manathu, மனத்து - மநஸ்ஸில் Vaithu, வைத்து - ஸ்த்தாபித்து Maravaamal, மறவாமல் - மறவாதபடி Vaazhthuthum, வாழ்த்துதும் - மங்களாசாஸநம் பண்ணுவோம் |
| 0 | பெரியதிருவந்தாதி - தனியன் || (முந்துற்ற நெஞ்சே) (முந்துற்ற நெஞ்சித்யாதி, இதுபெரிய திருவந்தாதித் தனியனாகப் பெரியோர்களாலே அநுஸந்தித்துக்கொண்டு போருமதாயிருக்கும், ஆகையால் இதுவும் அந்த ஸப்தத்தை அநுவதித்தாயிற்றிருப்பது.(முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து) 'முயற்றி சுமந்தெழுந்து முந் துற்ற நெஞ்சே'' என்றது முன்பின்னாயிருக்கிறது) 34 | முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே சந்த முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல் குருகூரன் மாறன் பேர் கூறு | Mundhutra nenje, முந்துற்ற நெஞ்சே - ஆழ்வாரை ஆஸ்ரவிக்க என்னைக்காட்டிலும் முன் செல்லும் மனமே Muyatri, முயற்றி - முயற்றி' என்று ஆரம்பித்துள்ள திவ்யப்ரபந்தத்தை Tharithu, தரித்து - (புத்தியிலே) தரித்து Uraithu, உரைத்து - (வாயாலே ) சொல்லி Vanthithu, வந்தித்து - (ஆழ்வாரை) வணங்கி Vazhthi, வாழ்த்தி - வாய் ஓயும் வரை மங்களாஸாஸனம் பண்ணி Murugu oorum, முருகு ஊரும் - தேன் பெருகும்படியான Sandham solai, சந்தம் சோலை - சந்தன மரங்களையுடைய சோலைகளாலே Soozh, சூழ் - குழப் பட்டதாய் Moy, மொய் - நீர் நிறைந்ததும் Poo, பூ - அழகியதுமான Porunal, பொருநல் - தாம்ரபரணி நதியையுடையதான Kuru kooran, குரு கூரன் - திருநகரிக்கு ஸ்வாமியான Maran per kooru, மாறன் பேர் கூறு - நம்மாழ்வாருடைய திருநாமத்தை அநுஸந்தித்துப் போரு |
| 0 | சிறிய திருமடல் - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று) 35 | வாழிபரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல் | பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர் வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும் கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய) வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர் வாழி, vazhi - வாழி மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே) வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை கொள், kol - உபதேசிக்கபெற்றவராய் மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு கோன், kon - நிர்வாககராய் தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய சுடர், sudar - ஒளியையுடைத்தாய் மானம், maanam - மிகப்பெரியதான வேல், vel - வேலானது வாழி, vazhi - வாழ்ந்திடுக |
| 0 | சிறிய திருமடல் - தனியன் || (முள்ளிச் செழுமலரோ) 36 | முள்ளிச் செழுமலரோ தாரான் முளை மதியம் கொல்லிக் கென்னுள்ளங் கொதியாமே வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி மருவாளன் தந்தான் மடல் | Sezhum, செழும் - செழிப்புள்ள Or, ஓர் - ஒப்பற்ற Mulli malar thaaran, முள்ளி மலர் தாரான் - முள்ளிப்பூக்களாலே கட்டப்பட்ட மாலையை உடையவராய் Vallal, வள்ளல் - கொடையாளியாய் Thiruvaalan, திருவாளன் - (பகவத் கைங்கர்யமாகிற) செல்வத்தையுடையராய் Maruvaalan, மருவாளன் - (கையில்) பொருந்திய வாளையுடையராய் Seer Kaliyan, சீர் கலியன் - கல்யாண குணங்களுடைய கலிகன்றியானவர் Mulai mathi am kollikku, முளை மதி அம் கொள்ளிக்கு - உதிக்கிற சந்திரனாகிற அழகிய நெருப்புக்கு En ullam, என் உள்ளம் - என்னுடைய நெஞ்சு Kothiyame, கொதியாமே - பரிதபிக்காதபடி Kaar Kaliyan, கார் கலியை - கறுத்த கலிதோஷத்தை Vetti, வெட்டி - போக்கி Madal thandhaan, மடல் தந்தான் - ‘சிறிய திருமடல்' என்னும் திவ்யப்ரபந்தத்தைத் தந்தருளினார் |
| 0 | பெரிய திருமடல் - தனியன் || (பொன்னுலகில் ) 37 | பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் நன்னுதலீர்! நம்பி நறையூரர் மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர் வன் வந்து | Nal nudhalir, நல் நுதலீர் - அழகிய நெற்றியை உடையவர்களே! Pon ulagil, பொன் உலகில் - பரமபதத்தில் Vaanavarum, வானவரும் - நித்ய ஸூரிகளும் Poomagalum, பூமகளும் - பெரியபிராட்டியாரும் Pottri seyyum, போற்றி செய்யும் - திருப்பல்லாண்டு பாடும் Nambi naraiyoorar, நம்பி நறையூரர் - பரிபூர்ணரான திருநறையூர் நம்பி Mannu ulagil, மன்னு உலகில் - நித்யமான பூலோகத்தில் En nilamai kandum, என் நிலைமை கண்டும் - என்னுடைய தசையைக் (துயறத்தை) கண்டபின்பும் Irangare aamagil, இரங்காரே ஆமாகில் - கருணை புரியவில்லை யாகில் Vanthu, வந்து - அவர் இருக்குமிடம் வந்து Mannum madal oorvan, மன்னும் மடல் ஊர்வன் - நிலையாக மடலூரக்கடவேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (பக்தாம்ருதம்) 40 | பக்தாம்ருதம் விச்வ ஜநாநு மோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் | Bhaktha amrutham, பக்த அம்ருதம் - தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும் Vishwa jana anumodhanam, விச்வ ஜந அநுமோதநம் - ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும் Sarva arthatham, ஸர்வ அர்த்ததம் - ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும் Sahasra saaga Upanishad samagamam, ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் - ஆயிரக்கணக்கான சாகைகளையுடைய உபநிஷத்துக்களின் திரட்சியாயிருப்பதும் Sri Sadagopa vaangmayam, ஸ்ரீ சடகோப வாங்மயம் - நம்மாழ்வாருடைய ஸ்ரீஸுக்தி மயமுமான Draavida vedha saagaram, த்ராவிட வேத ஸாகரம் - தமிழ் வேதக் கடலை Aham, அஹம் - அடியேன் Namami, நமாமி - ஸேவிக்கிறேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (திருவழுதி நாடென்றும்) 41 | திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் மருவினிய வண் பொருநலென்றும் - அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து | Nenje, நெஞ்சே - மனமே! Thiru vazhuthi naadu endrum, திரு வழுதி நாடு என்றும் - திருவழுதி நாடென்கிற தேசத்தை அநுஸந்தித்தும் Then kurugoor endrum, தென் குருகூர் என்றும் - அழகிய திருக்குருகூரென்கிற திவ்யதேசத்தை அநுஸந்தித்தும் Maruva iniya van porunal endrum, மருவ இனிய வண் பொருநல் என்றும் - ஆசைப்படும்படி போக்யமாய் அழகியதான தாமிரபர்ணியாற்றை அநுஸந்தித்தும் Aru maraigal, அரு மறைகள் - அருமையான வேதங்களை Anthadhi seidhan, அந்தாதி செய்தான் - அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய Adi inaiye, அடி இணையே - உபய பாதங்களையே epozhudhum, எப்பொழுதும் - இடைவிடாமல் Thelinthu, தெளிந்து - தெளிவுடனே Sindhiyaai, சிந்தியாய் - சிந்தை செய்யக்கடவை |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மனத்தாலும் வாயாலும்) 42 | மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரையல்லா திறைஞ்சேன் - தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று | Manathalum, மனத்தாலும் - நெஞ்சினாலும் Vayalum, வாயாலும் - வாக்கினாலும் Van kurugoor penum, வண் குருகூர் பேணும் - திருநகரியை ஆதரிக்கின்ற Inathaarai allaadhu, இனத்தாரை அல்லாது - கோஷ்டியில் சேர்ந்தவர்களைத் தவிர (மற்றையோர்களை) Irainjen, இறைஞ்சேன் - வணங்கமாட்டேன் Dhanathalum, தனத்தாலும் - செல்வத்தினாலும் Yedhum kuraivu ilen, ஏதும் குறைவு இலேன் - எவ்விதமான குறையுமுடையேனல்லேன் (எதனாலென்னில்) Endhai Sadagopan, எந்தை சடகோபன் - அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய Paadhangal, பாதங்கள் - திருவடிகள் Yaamudaiya, யாமுடைய - நம்முடைய Patru, பற்று - ஆதாரமாயிராநின்றது |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (ஏய்ந்த பெருங் கீர்த்தி) 43 | ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராதவுள்ளம் பெற. | Aayndha, ஆய்ந்த - குற்றங் கலசாதம் Peru seer, பெரு சீர் - சிறந்த திருக்குணங்களினால் Aar, ஆர் - பரிபூர்ணரான Sadagopan, சடகோபன் - நம்மாழ்வார் (அருளிச் செய்த) Senthamizh vedham, செந்தமிழ் வேதம் - செவ்விய தமிழ் வேதத்தை Tharikkum, தரிக்கும் - தாங்கிக்கொள்ளவல்லதாய் Peradha, பேராத - வேறொன்றில் செல்லமாட்டாததான Ullam, உள்ளம் - நெஞ்சை Pera, பெற - பெறும் பொருட்டு Eayndha peru keerthi Ramanusa muni than, ஏய்ந்த பெரு கீர்த்தி இராமாநுச முனி தன் - தகுதியான பெரும்புகழையுடைய எம்பெருமானது Vaayndha padham malar, வாய்ந்த பாதம் மலர் - பொருத்தமான திருவடித் தாமரைகளை Vanangugindren, வணங்குகின்றேன் - வணங்குகின்றேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (வான் திகழும்) 44 | வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன் | Vaan thigazhum Solai, வான் திகழும் சோலை - ஆகாசத்தளவும் ஒங்கி விளங்குகின்ற சோலைகளையும் Madil, மதிள் - ஸப்த ப்ராகாரங்களையும் உடைத்தான Arangar, அரங்கர் - திருவரங்கத்தில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய Van pugazh mel aandra, வண் புகழ் மேல் ஆன்ற - திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த Tamizh maraigal aayiramum, தமிழ் மறைகள் ஆயிரமும் - தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் Eendra mudhal thai, ஈன்ற முதல் தாய் - பெற்ற முக்கியமான மாதா Sadagopan, சடகோபன் - நம்மாழ்வாராவர் Moimpaal, மொய்ம்பால் - மிடுக்குடனே Valartha, வளர்த்த - அதனை வளர்த்த Idham thai, இதம் தாய் - ஹிதமான மாதா Ramanusan, இராமாநுசன் - எம்பெருமானாராவர் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மிக்க விறை) 45 | மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன் யாழினிசை வேதத் தியல் | Kurugaiyar kon, குருகையர் கோன் - திருநகரியிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் (அருளிச்செய்த) Yaazhin isai vedhathu iyal, யாழின் இசை வேதத்து இயல் - வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் Mikka irai nilaiyum, மிக்க இறை நிலையும் - ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும் Meyaam uyir nilaiyum, மெய்யாம் உயிர் நிலையும் - நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் Thakka neriyum, தக்க நெறியும் - ஸ்வரூபாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும் Thadai aagi thokku iyalum oozh vinaiyum, தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும் - (பகவத்ப்ராப்திக்குப்) பிரதிபந்தகமாகிச் சேர்ந்து கிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும் Vaazh vinaiyum, வாழ்வினையும் - வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும் Oodhum, ஓதும் - கூறுவன |
| 0 | திருவெழுகூற்றிருக்கை - தனியன் || (சீரார் திருவெழுகூற்றிருக்கை) 46 | சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால் ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ் ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே | Seer, சீர் - (சப்தார்த்தங்களினுடைய) குணங்களினாலே Aar, ஆர் - நிறைந்த Thiruvezhukootrirukkai ennum, திருவெழுகூற்றிருக்கை என்னும் - திருவெழுகூற்றிருக்கை என்று ப்ரஸித்தமாய் Sem, செம் - ஸுந்தரமான Tamizhaal, தமிழால் - த்ராவிட ரூபமான திவ்ய ப்ரபந்தத்தினால் Aaraa, ஆரா - த்ருப்தி பிறவாத Amudham, அமுதம் - அம்ருதம்போல் நிரதிசய போக்யனாய் Kudanthai, குடந்தை - திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கிற Piraan than, பிரான் தன் - உபகாரகனான ஸர்வேஸ்வரனுடைய Adiyinai keezh, அடியிணைக்கீழ் - ஸ்ரீபாதங்களின் கீழே (விஷயமாக) Er, ஏர் - (நிர்த்தோஷத்வமாகிற) அழகினால் Aar, ஆர் - பூர்ணமான Marai, மறை - வேதங்களினுடைய Porul ellaam, பொருள் எல்லாம் - அர்த்தங்கள் அனைத்தையும் Edutha, எடுத்த - உத்தரித்து Ivvulagu, இவ்வுலகு - இந்த லோகத்திலுள்ளார் Uyya, உய்ய - உஜ்ஜீவிக்கும்படி Soraamal, சோராமல் - (ஒன்றும்) நழுவாமல் Sonna, சொன்ன - அருளிச் செய்த Arulmaari, அருள்மாரி - திருமங்கையாழ்வாருடைய Paadham, பாதம் - திருவடிகளே Namakku, நமக்கு - நமக்கு Thunai, துணை - தஞ்சம் |
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை என்றாயிற்று) 47 | முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க் கென்னுக் கடவுடையேன் யான் | Munnai vinai, முன்னை வினை - முன்னே செய்த பாபங்களெல்லாம் Agala, அகல - ஒழிவதற்காக Moongil kudi Amudhan, மூங்கில் குடி அமுதன் - மூங்கிற்குடி என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய Pon am kazhal, பொன் அம் கழல் - பொன்போல் அழகிய Kamalapothu irandum, கமலப்போது இரண்டும் - பாதாரவிந்தங்களிரண்டையும் Ennudaiya sennikku, என்னுடைய சென்னிக்கு - எனது தலைக்கு Ani aaga, அணி ஆக - ஆபரணமாக Serthinen, சேர்த்தினேன் - பொருந்தவைத்துக் கொண்டேன் Yaan, யான் - இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் Then pulatharkku, தென் புலத்தார்க்கு - தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு Ennukku, என்னுக்கு - எதுக்காக Kadavu udaiyen, கடவு உடையேன் - ப்ராப்தி யுடையேன்? |
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (விஷயாந்தரங்களின் அனுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து, அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடி பணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய், இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய பிரபந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்றார்) 48 | நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல் உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால் இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே | Nenjame, நெஞ்சமே - மனமே Nayam tharu, நயம் தரு - விஷயங்களால் தரப்படுகிற Per inbam ellaam, பேர் இன்பம் எல்லாம் - சிற்றின்பங்கள் யாவும் Pazhuthu endru, பழுது என்று - வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழித்து) Nanninar paal, நண்ணினர் பால் - தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் Sayam tharu keerthi, சயம் தரு கீர்த்தி - ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான Ramanusa muni, இராமானுச முனி - எம்பெருமானாருடைய Thaal inai mel, தாள் இணை மேல் - இரண்டு திருவடிகள் விஷயமாக Uyarndha gunathu, உயர்ந்த குணத்து - சிறந்த குணசாலியான Thiruvarangathu amudhu, திருவரங்கத்து அமுது - திருவரங்கத் தமுதனார் Ongum anbaal, ஓங்கும் அன்பால் - கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே Iyambum, இயம்பும் - அருளிச்செய்த Kalithurai anthaadhi, கலித்துறை அந்தாதி - கட்டளைக் கலித்துறையினால் அமைந்த நூற்றந்தாதியை Odha, ஓத - அத்யயநம் செய்ய Isai, இசை - ஸம்மதித்திருக்கக் கடவை |
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (பொருள் வேதங்களுக்கு முரண்பட்ட உபதேசங்களைக் கூறும் ஆறு சமயங்களையும் மிகவும் எளிதாக வென்ற யதிராஜனே! உனது திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் தொண்டு புரிந்தபடி உள்ளவரும், உம்மிடம் மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய திருவரங்கத்தமுதனார், தனது விரிவான சொற்கள் கொண்டு உனது பெருமைகள் மற்றும் திருநாமங்களை விரிவாக உரைத்தார். அந்தச் சொற்கள் இரவும் பகலும் எனது நாவில் நிலைத்து நிற்கும்படி நீரே அருளவேண்டும். இதுவே எனது விண்ணப்பம் ஆகும்) 49 | சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும் நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம் வெல்லும் பரம இராமானுச! இதென் விண்ணப்பமே | Aru samayam, அறு சமயம் - அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் Vellum, வெல்லும் - கண்டித்தருளின Parama, பரம - ஆரியரான Iramanusa, இராமானுச - எம்பெருமானாரே! Unadhu adi pothukku, உனது அடி போதுக்கு - தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே Thondu seiyum, தொண்டு செய்யும் - வாசிக கைங்கர்யம் பண்ணுகிற Nal anbar, நல் அன்பர் - பரம பக்தர்கள் Sollin thogai kondu, சொல்லின் தொகை கொண்டு - சப்த ராசிகளைக் கொண்டு Ethum, ஏத்தும் - துதிக்கிற Un namam ellam, உன் நாமம் எல்லாம் - தேவரீருடைய திருநாமங்களெல்லாம் Enthan navilulle, என்தன் நாவிலுள்ளே - எனது நாவிலே Allum pagalum, அல்லும் பகலும் - அஹோராத்ரமும் Amarum padi, அமரும் படி - பொருந்தியிருக்கும் படி Nalku, நல்கு - க்ருபை செய்தருள வேணும் Idhuve en vinnappam, இதுவே என் விண்ணப்பம் - இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம் |
| 2946 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில்.) 6 | மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக் கனியைக் கரும்பின் இன் சாற்றைக்க ட்டியைத் தேனை அமுதை முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6 | தனியன்,Thaniyan - ஒப்பற்றவாய் |