| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை என்றாயிற்று) 47 | முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க் கென்னுக் கடவுடையேன் யான் | Munnai vinai, முன்னை வினை - முன்னே செய்த பாபங்களெல்லாம் Agala, அகல - ஒழிவதற்காக Moongil kudi Amudhan, மூங்கில் குடி அமுதன் - மூங்கிற்குடி என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய Pon am kazhal, பொன் அம் கழல் - பொன்போல் அழகிய Kamalapothu irandum, கமலப்போது இரண்டும் - பாதாரவிந்தங்களிரண்டையும் Ennudaiya sennikku, என்னுடைய சென்னிக்கு - எனது தலைக்கு Ani aaga, அணி ஆக - ஆபரணமாக Serthinen, சேர்த்தினேன் - பொருந்தவைத்துக் கொண்டேன் Yaan, யான் - இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் Then pulatharkku, தென் புலத்தார்க்கு - தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு Ennukku, என்னுக்கு - எதுக்காக Kadavu udaiyen, கடவு உடையேன் - ப்ராப்தி யுடையேன்? |
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (விஷயாந்தரங்களின் அனுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து, அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடி பணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய், இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய பிரபந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்றார்) 48 | நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல் உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால் இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே | Nenjame, நெஞ்சமே - மனமே Nayam tharu, நயம் தரு - விஷயங்களால் தரப்படுகிற Per inbam ellaam, பேர் இன்பம் எல்லாம் - சிற்றின்பங்கள் யாவும் Pazhuthu endru, பழுது என்று - வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழித்து) Nanninar paal, நண்ணினர் பால் - தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் Sayam tharu keerthi, சயம் தரு கீர்த்தி - ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான Ramanusa muni, இராமானுச முனி - எம்பெருமானாருடைய Thaal inai mel, தாள் இணை மேல் - இரண்டு திருவடிகள் விஷயமாக Uyarndha gunathu, உயர்ந்த குணத்து - சிறந்த குணசாலியான Thiruvarangathu amudhu, திருவரங்கத்து அமுது - திருவரங்கத் தமுதனார் Ongum anbaal, ஓங்கும் அன்பால் - கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே Iyambum, இயம்பும் - அருளிச்செய்த Kalithurai anthaadhi, கலித்துறை அந்தாதி - கட்டளைக் கலித்துறையினால் அமைந்த நூற்றந்தாதியை Odha, ஓத - அத்யயநம் செய்ய Isai, இசை - ஸம்மதித்திருக்கக் கடவை |
| 0 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (பொருள் வேதங்களுக்கு முரண்பட்ட உபதேசங்களைக் கூறும் ஆறு சமயங்களையும் மிகவும் எளிதாக வென்ற யதிராஜனே! உனது திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் தொண்டு புரிந்தபடி உள்ளவரும், உம்மிடம் மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய திருவரங்கத்தமுதனார், தனது விரிவான சொற்கள் கொண்டு உனது பெருமைகள் மற்றும் திருநாமங்களை விரிவாக உரைத்தார். அந்தச் சொற்கள் இரவும் பகலும் எனது நாவில் நிலைத்து நிற்கும்படி நீரே அருளவேண்டும். இதுவே எனது விண்ணப்பம் ஆகும்) 49 | சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும் நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம் வெல்லும் பரம இராமானுச! இதென் விண்ணப்பமே | Aru samayam, அறு சமயம் - அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் Vellum, வெல்லும் - கண்டித்தருளின Parama, பரம - ஆரியரான Iramanusa, இராமானுச - எம்பெருமானாரே! Unadhu adi pothukku, உனது அடி போதுக்கு - தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே Thondu seiyum, தொண்டு செய்யும் - வாசிக கைங்கர்யம் பண்ணுகிற Nal anbar, நல் அன்பர் - பரம பக்தர்கள் Sollin thogai kondu, சொல்லின் தொகை கொண்டு - சப்த ராசிகளைக் கொண்டு Ethum, ஏத்தும் - துதிக்கிற Un namam ellam, உன் நாமம் எல்லாம் - தேவரீருடைய திருநாமங்களெல்லாம் Enthan navilulle, என்தன் நாவிலுள்ளே - எனது நாவிலே Allum pagalum, அல்லும் பகலும் - அஹோராத்ரமும் Amarum padi, அமரும் படி - பொருந்தியிருக்கும் படி Nalku, நல்கு - க்ருபை செய்தருள வேணும் Idhuve en vinnappam, இதுவே என் விண்ணப்பம் - இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம் |