| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (திருமாலை ஆண்டான் தனியன்) யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன் 19 | तमेव मत्वा परवासुदेव रङ्गेशयं राजत्रदर्हणीयम् । प्रावोधिक योऽकृत सूक्तिमालां भक्ताङ्किरेणुं भगवन्तमीडे ॥ தமேவ மத்வா பராஸுதேவம் ரங்கேயம் ராஜவதர்ஹணீயம் | ப்ராபோதிகீம் யோ≤க்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே || | Ya, ய: - யாவரொரு ஆழ்வார் Rajavath, ராஜவத் - அரசனைப் போல் Arhaniyam, அர்ஹணீயம் - பூஜிக்கத்தக்கவராய் Rangesayam, ரங்கேஸயம் - திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை Thamparavasudevam eva, தம்பரவாஸுதேவம் ஏவ - அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே Madhva, மத்வா - ப்ரதிபத்திபண்ணி Prabodhikeem, ப்ராபோதிகீம் - திருப்பள்ளியுணர்த்துமதான Sookthimalam, ஸூக்திமாலாம் - பாமாலையை Akrutha, அக்ருத - அருளிச்செய்தாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Bhagavantham, பகவந்தம் - ஞானம் முதலிய குணங்கள் Bhakthangrirenum, பக்தாங்க்ரிரேணும் - அமைந்த தொண்டரடிப்பொடியாழ் வாரை Eede, ஈடே - துதிக்கின்றேன் |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது) வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய் தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும் என்று பெரியோர் கூறுவர். 20 | மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர் | Vandu, வண்டு - வண்டுகளானவை Thinartha, திணர்த்த - நெருங்கிப் படிந்திருக்கப் பெற்ற Vayal, வயல் - கழனிகள் சூழ்ந்த Then, தென் - அழகிய Arangathu, அரங்கத்து - திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற) Ammanai, அம்மானை - பெரிய பெருமாளை Palli unarthum, பள்ளி உணர்த்தும் - திருப்பள்ளியுணர்த்துமவராய் Piran, பிரான் - பரமோபகாரகராய் Thondaradipodi, தொண்டரடிப்பொடி - தொண்டரடிப் பொடி என்னுந் திருநாமமுடையரான ஆழ்வார் Udhitha oor, உதித்த ஊர் - திருவவதரித்த திவ்ய தேசமானது Maa maraiyor, மா மறையோர் - சிறந்த வைதிகர் கள் Manniya, மன்னிய - பொருந்தி வாழத்தகுந்த Seer, சீர் - சீர்மையையுடைய Mandangkudi, மண்டங்குடி - திருமண்டங்குடி என்கிற Thol nagaram, தொல் நகரம் - அநாதியான நகரமாகும் Enbar, என்பர் - என்று பெரியோர் கூறுவர் |