Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருமாலை- தனியன் (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருமாலை- தனியன் || (மற்றொன்றும் வேண்டா மனமே) இதில் மநஸ்ஸைக்குறித்து, பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த ஆழ்வார் திருநாமத்தை நிரந்தர அநுஸந்தாநம் பண்ணும்படி சொல்லுகிறது. 18
மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற
திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை யெப்பொழுதும் பேசு
Maname, மனமே - என் நெஞ்சமே!
Madhil Arangar, மதிள் அரங்கர் - ஸப்த ப்ராகாரங்களையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரும்
Kanru inam, கன்று இனம் - பசுக்கூட்டங்களை
Meitha, மேய்த்த - மேய்த்தவருமான எம்பெருமானுடைய
Kazhal inai keezh, கழல் இணை கீழ் - இரு திருவடிகளிலும
Utra, உற்ற - ஊன்றிய பக்தியையுடையவரும்
Thirumaalai paadum, திருமாலை பாடும் - திருமாலை' என்னும் பிரபந்தத்தைப் பாடுமவரும்
Seer, சீர் - கல்யாண குணங்கள் பொருந்தியவரும்
Thondar adi podi, தொண்டர் அடி பொடி - தொண்டரடிப்பொடி என அழைக்கப்படுமவருமான
Em Perumaanai, எம் பெருமானை - எங்களுடைய ஸ்வாமியை
Epozhuthum, எப்பொழுதும் - எல்லாக்காலத்திலும்
Pesu, பேசு - அநுஸந்தித்துப்போரு
Matru ondrum, மற்று ஒன்றும் - வேறு ஒரு புருஷார்த்தமும்
Venda, வேண்டா - வேண்டுவதில்லை