திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 104 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
104பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8
பதவுரை Show / Hide
இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது

என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்,En appan - என் தகப்பன்
அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்,Alavaay - அளப்பாயாக
என்ன,Enna - என்று சொல்ல
மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை
வானில்,Vaanil - ஆகாசத்திலே
சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த
மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-;
வேங்கடம்,Vengadam - திருமலையிலே
வாணனே,Vaanane - வாழுமவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ