Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 105 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
105ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9
கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9
கண்ட,Kanda - கண்ணாற்கண்ட
கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும்
மலையும்,Malayum - மலைகளும்
உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா,Aatraa - போதாவாம்;
முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே!
ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!)
என்று,Endru - என்று கூப்பிட்டு
இண்டை,Indai - நெருங்கின
சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்,Eesan - சிவன்
இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க
மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
மார்வில்,Maarvil - திரு மார்பிலே
மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ