| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 108 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 1 | வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1 | என் குட்டன்,En kutthan - என் பிள்ளை வட்டு நடுவே,Vattu naduve - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே வளர்கின்ற,Valarkindra - வளர்த்துக் கொண்டிருப்பதான மாணிக்கம் மொட்டு,Manikkam mottu - இந்திர நீலமயமான அரும்பினுடைய நுனையில்,Nunaiyil - நுனியில் முளைக்கின்ற,Mulaikkindra - உண்டாகின்ற முத்தே போல்,Mutthe pol - முத்தைப் போல சொட்டு சொட்டு என்ன,Sottu sottu enna - சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி துளிர்க்க துளிர்க்க,Thulirkkal thulirkkal - (அம்மாணிக்க மொட்டு) பல தரம் துளியா நிற்க வந்து,Vandhu - ஓடி வந்து என்னை,Ennai - என்னுடைய புறம்,Puram - முதுகை புல்குவான்,Pulkuvan - கட்டிக் கொள்வான்; கோவிந்தன் என்னை புறம்புல்குவான்,Govindan ennai purampulkuvan - கோவிந்தன் என்னை புறம்புல்குவான் |