திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 110 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
110பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3
பதவுரை Show / Hide
கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க
உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல்
மண்,Man - பூமியை
ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அத்தன்,Atthan - ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்