திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 111 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
111பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4
நாந்தக மேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4
பதவுரை Show / Hide
நாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை
ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள
நம்பி,Nambi - பெரியோனே!
சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன்
என்று,Endru - என்று சொல்லி
தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே
வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள்
உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி
விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு
கோன்,Kon - நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்