Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 112 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
112ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 5
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ்
பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5
பண்டு,Pandu - முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்,Venkalam paththiram - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி,Katti - (அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி,Vilaiyaadi - விளையாடி
பல கண் செய்த,Pala kan seitha - பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை,Karu thazhai - பெரிய குடையாகிற
காவின் கீழ்,Kaavin keezh - சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி,Pala pan paadi - (அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப,Pallandu isaippa - மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்,Pala man kondaan - பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்,Puram pulkuvan - வாமனன் என்னை புறம் புல்குவான்