திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 113 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
113பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6
சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6
பதவுரை Show / Hide
உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த
ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்,Saththiram - குடையை
ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு
தனி,Thani - ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்)
கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும்
கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்,Paththiram - விலக்ஷணமான
ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-;
பார்,Paar - பூமியை
அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-.