திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 114 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
114பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 7
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7
பதவுரை Show / Hide
பொத்த உரலை,Potta uralai - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து,Kavizhththu - தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி,Adhan mel aeri - அவ் வுரவின் மேலேறி
தடாவினில்,Thadavinil - மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்,Thiththitha paalum - மதுரமான பாலையும்
வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்,Thiru vayiru aar - வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய,Meththa vizhunkiya - மிகுதியாக விழுங்கின
அத்தன்,Atthan - தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்,Aazhiyaan - (இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.,Ennai puram pulkuvan - என்னை புறம் புல்குவான்-.