| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 115 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 8 | மூத்தவை காண முது மணற் குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8 | மூத்தவை,Moothavai - வயசு சென்ற இடைச் சனங்கள் காண,Kaana - காணும் படியாக முது மணல் குன்று ஏறி,Mudhu manal kunru aeri - நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் வாய்த்த,Vaayththa - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின மறையோர்,Maraiyor - ப்ரஹ்ம ரிஷிகள் வணங்க,Vananga - தன்னைக் கண்டு வணங்கவும் இமையவர்,Imaiavar - தேவர்கள் ஏத்த,Aetha - ஸ்தோத்ரஞ்செய்யவும் குழலால் இசைபாடி,Kuzhalal isaipaadi - வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும் உவந்து,Uvandu - ஸந்தோஷித்து கூத்து ஆடி,Koothu aadi - கூத்தாடியும் நின்று வந்து என்னை புறம்புல்குவான்-;,Vandhu ennai purampulkuvan - வந்து என்னை புறம்புல்குவான்-; எம்பிரான் என்னை புறம்புல்குமான்-,Emperaan ennai purampulkumaan - வந்து என்னை புறம்புல்குவான்-; |