திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 116 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
116பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 9
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9
பதவுரை Show / Hide
இந்திரன் காலினில்,Indhiran kaalinil - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு,Karphakam kaavu - கற்பகச் சோலையை
கருதிய,Karuthiya - (தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு,Kaathalikkum - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது,Ippozhudhu - இப்பொழுதே
ஈவன்,Eevan - கொணர்ந்து தருவேன்
என்று,Endru - என்று சொல்லி
நிலா திகழ்,Nila thigazh - நிலா விளங்குகின்ற
முற்றத்துள்,Mutraththul - அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து,Nirpan seyththu - இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை,Uythanavan ennai - தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-;
உம்பர் கோன்,Umbar kon - (அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம்புல்குவான்-.,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-;