| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 117 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10 | ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10 | வேய்,Vey - மூங்கில் போன்ற தடந்,Tadan - பெரிய தோளி,Tholi - தோள்களை யுடையனான ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன் ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் அன்று,Andru - அக் காலத்திலே புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய சொல்,Sol - சொல்லை விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார் மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள் வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை பெற்று,Petru - அடைந்து மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள். |