Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 119 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
119ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2
மலை புரை,Malai purai - மலையை ஒத்த
தோள்,Thol - தோள்களை யுடைய
மன்னவர்,Mannavar - அரசர்களான
மாரதரும்,Maaratharum - மஹா ரதரும்
மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும்
குலைய,Kulaiya - அழியவும்
நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு,Pattu - மரணமடைந்து
அழிய,Azhiya - உருவமழிந்து போகவும்
பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய
சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில்
வளைய,Valaiya - வளையவும்
திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற
செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.