Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 121 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
121ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4-
இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை,Ezhai - அவிவேகிகளான
வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்,Aayar - இடையர்களின்
மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை

தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும்
வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன்
மாள,Maala - மாண்டு போம்படி
புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்,Engal - எங்களுடைய
பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன
அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.