| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 122 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 5 | சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5- | சேபூண்ட,Seboonda - எருதுகள் கட்டுதற்கு உரிய சாடு,Sadu - சகடம் சிதறி,Sithari - (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை) உருக்குலையும்படி உதைத்து நெய்க்கு,Neikku - நெய்க்கு ஆசைப்பட்டு திருடி,Thirudi - களவு செய்து ஆப்பூண்டு,Aboonda - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு (அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க) நந்தன் மனைவி,Nandan manaivi - நந்தகோபன் தேவியான அவ் யசோதை கடை தாம்பால்,Kadai thambal - (தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க) துள்ளித் துடிக்க,Thullith thudikka - துடிக்க துடிக்க சோப்பூண்டு,Soboonda - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு அன்று,Andru - (அதனோடு நல்லாமல்) அக்காலத்தில் ஆப்பூண்டாள்,Aboondal - (எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |