திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 124 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
124பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 7
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம் கொத்தார் கருங்குழல் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-7
பதவுரை Show / Hide
தத்து கொண்டாள் கொல் ஓ,Thathu kondal kol o - (இந்தப் பிள்ளையை யசோதை) தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
தானே பெற்றாள் கொலோ,Thane petral kolo - (அல்லது) ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்,Sitham anaiyal - (கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை,Asothai - யசோதையினுடைய
இளஞ்சிங்கம்,Ilanchingam - சிங்கக்குட்டி போன்றவனும்
கொத்து ஆர் கருங்குழல்,Kothu ar karunkuzhal - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி,Gopalar kon ari - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
அத்தன்,Athan - ஸ்வாமியான இவன்