திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 125 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
125பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8
கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற் கருளிவன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8
பதவுரை Show / Hide
கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்,Val - பலிஷ்டமான
கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்,Sol - சொல்லை
கொண்டு,Kondu - அங்கீகரித்து
எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்)
கரியும்,Kariyum - யானைகளையும்
பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும்
பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு
அருளி,Aruli - கொடுத்துவிடல்
வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்