திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 126 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
126பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 9
பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-9
பதவுரை Show / Hide
பதகம்,Padagam - பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை,Mudhalai - முதலையின்
வாய்,Vai - வாயிலே
பட்ட,Patta - அகப்பட்ட
களிறு,Kaliru - ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி,Kathari - (தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி,Kai kooppi - கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன,En kanna kanna enna - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
அங்கு,Angu - அப்போதே
உதவ,Udhava - (அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து,Pul oorndhu - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்,Uru thuyar - (அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த,Theertha - போக்கின
அதகன்,Athagan - (ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து,Vandhu - அப்பூச்சி காட்டுகின்றான்-.