Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 127 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
127ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10
வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10
வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை,Ilangai - லங்கையானது
மலங்க,Malanga - பாழாம்படி
சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய
வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார்
விரித்த,Viritha - பரக்க கூறிய
சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,Vallar - கற்க வல்லவர்
போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.