Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 128 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
128ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 1
அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு வுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே–2-2-1
அரவு அணையாய்,Aravu anaiyai - சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே,Aayar ere - இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத,Nee iravum unnaadha - நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்,Urangip ponaai - உறங்கிப் போய் விட
இன்றும்,Indrum - இப் போதும்
உச்சி கொண்டது,Uchi kondathu - (பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்,Aal - ஆதலால்
அம்மம் உண்ண,Ammam unna - முலை யுண்பதற்கு
துயில் எழாய்,Thuyil ezhai - (தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்,Varavum kaanen - (நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
வயிறு அசைத்தாய்,Vayiru asaithai - (உனக்குப் பசியில்லை யென்போமென்றா) வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்,Vana mulaigal - (எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய,Sornthu paaya - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய,Thiru udaiya - அழகை உடைய
வாய் மடுத்து,Vai maduthu - (உன்) வாயை வைத்து
திளைத்து,Thilaithu - செருக்கி
உதைத்து,Uthaithu - கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்,Parugidai - முலையுண்பாய்.