| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 13 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால்.) 1 | வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1 | வண்ணம்,Vannam - அழகு பொருந்திய மாடங்கள்,Madangal - மாடங்களாலே சூழ்,Soozh - சூழப்பட்ட திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள) கேசவன்,Kesavan - கேசவனென்ற திருநாமமுடையனாய் நம்பி,Nambi - கல்யாணகுண பரிபூர்ணனான கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ணன் இன் இல்,In il - (நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே பிறந்து,Pirandhu - திருவவதிரித்தருளின வளவிலே, எண்ணெய்,Enney - (திருவாய்ப்பாடியிலுள்ளார்) எண்ணெயையும் சுண்ணம்,Sunnam - மஞ்சள் பொடியையும் எதிர் எதிர் தூவிட,Ethir ethir thoovida - (ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ, கண்டக்கினிய,Kandakkiniya - விசாலமாய் நல்,Nal - விலக்ஷணமான முற்றம்,Mutram - (நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது கலந்து,Kalandhu - (எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து அளறு ஆயிற்று,Alaru aayitru - சேறாய்விட்டது. |