Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 131 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
131ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 4
கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்தள வன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே–2-2-4
அமரர் கோவே,Amarar kove - தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்,Kanjan thannal - கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட,Punarppatta - (உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு,Kallas sakadu - க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய,Kalakku azhiya - கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்,Panji anna mel adiyal - பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது,Paindha pothu - உதைத்த போது
நொந்திடும் என்று,Nondhidum endru - (உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்,Anjinen kaan - பயப்பட்டேன் காண்;
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்,Aayar kootathu alavu andru aal - (என்னுடைய அச்சம்) இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்;
கஞ்சனை,Kanjanai - (உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்,Un vanjanaiyal - உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப்படுத்தாய்,Valaipaduthai - (உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக.