Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 133 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
133ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 6
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6
மின் அனைய,Min anaiya - மின்னலை யொத்த
நுண்,Nun - ஸூக்ஷ்மமான
இடையார்,Idaiyar - இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்,Viri kuzhal mel - விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த,Nuzhaindha - (தேனை உண்ணப்) புகுந்த
வண்டு,Vandu - வண்டுகள்
இன் இசைக்கும்,In isaiyum - (தேனை யுண்டு களித்து) இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது,Inidhu - போக்யமாக
அமர்ந்தாய்,Amarnthai - எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்,Unnai kandar - உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்,Ivanai petra vayiru udaiyaal - இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ,Enna nonbu notraal kolo - என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்,Ennum - என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை,Varthai - வார்த்தையை
எய்துவித்த,Eythuvitha - (எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா,Irudheekesa - ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக.