திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 135 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
135பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 8
இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன் திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8
பதவுரை Show / Hide
இரு மலை போல்,Iru malai pol - இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த,Ethirntha - எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்,Mallar iruvar - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்,Angam - உடம்பை
எரி செய்தாய்,Eri seithai - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து,Vandhu - (நீ) வந்து
என் அல்குல் ஏறி,En alkul eri - என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்,Un - உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு,Thiru malindhu thigazhum maarvu - அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க,Thekka - (முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை,Oru mulaiai - ஒரு முலையை
வாய் மடுத்து,Vai maduthu - வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை,Oru mulaiai - மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு,Nerudik kondu - (கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
ஏங்கி ஏங்கி,Engi engi - (மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்) இளைத்திளைத்து
இரு முலையும்,Iru mulaigal - (இப்படி) இரண்டு முலையையும்
முறை முறை ஆய்,Murai murai aai - மாறி மாறி
இருந்து,Irundhu - பொருந்தியிருந்து
உணாய்,Unai - உண்பாயாக.