Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 136 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
136ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 9
அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கமரர்க் கமுதளித்த அமரர் கோவே முலையுணாயே–2-2-9
அம்ம,Amma - தலைவனே!
அங்கு,Angu - (அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த) அக் காலத்திலே
விம்ம,Vimm - (அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு,Amararkku - (அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த,Amudhu alitha - (க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே,Amarar kove - தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்,Am kamalam podhu agathil - அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்,Ani kol mutham sindhinal pol - அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்,Sem kamalam mugam - செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப,Viyarpa - வியர்த்துப் போக
இ முற்றத்தூடே,I mutraththude - இந்த முற்றத்திலேயே
தீமை செய்து,Theemai seithu - தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக,Angam ellam puzhudhi aga - உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா,Alaiya venda - புழுதி யளையாதே;
முலை உணாய்,Mulai unai - முலை யுண்ண வாராய்.