Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 137 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
137ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 10
ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன்
ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி
ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10
ஓடஓட,Odaoda - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்,Olikkum - சப்திக்கின்ற
கிண் கிணிகள்,Kin kinigal - பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே,Osai paaniyale - ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி,Paadi paadi - இடைவிடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை,Athanukku etra koothai - அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு,Asaindhu asaindhittu - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி,Aadi aadi - ஆடிக் கொண்டு
வருகின்றாயை,Varugindraiyai - வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்,Parpanapan endru irundhen - (வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ,Nee - நீ
ஆடி,Aadi - ஆடிக்கொண்டே
ஓடிஓடிபோய் விடாதே,Odi odipoi vidaathe - (என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.,Mulai unai - முலை உணாய்.