திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 139 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 1 | போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1 | பதவுரை Show / Hideபாடு உடைய,Paadu Udaiya - பெருமையை உடைய நின் தந்தையும்,Nin Thandaiyum - உன் தகப்பனும் போய்,Poi - (வெளியே) போய் தாழ்த்தான்,Thaazhthaan - (திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்; பொரு திறல்,Poru Thiral - போர் செய்யுந் திறமை யுள்ள கஞ்சன்,Kanjan - கம்ஸனோ கடியன்,Kadiyan - (உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்; கடல்,Kadal - கடல் போன்ற (ச்ரமஹரமான) வண்ணா,Vannaa - வடிவை யுடையவனே! உன்னை,Unnai - உன்னை காப்பாரும்,Kaapaarum - பாதுகாப்பவரான வேறொருவரும் இல்லை,Illai - (இங்கு இப்போது) இல்லை; தனியே போய்,Thaniye Poi - (நீயோவென்றால்) அஸஹாயனாய்ப் போய் எங்கும்,Engum - கண்ட விடங்களிலும் திரிதி,Thirithi - திரியா நன்றாய்; பேய்,Pey - பூதனையினுடைய முலை பால்,Mulai Paal - முலைப்பாலை உண்ட,Unda - உட்கொண்ட பித்தனே,Piththane - மதி மயக்கமுள்ளவனே! கேசவ,Kesava - கேசவனே நம்பி,Nambi - பூர்ணனானவனே! உன்னை காது குத்த,Unnai Kaathu Kutha - உன் காதுகளைக் குத்துவதற்காக ஆய் பாலர்,Aai Paalar - இடைச்சியர்களாகிய பெண்டுகள் எல்லாரும்,Pendumkal Ellarum - எல்லாப் பெண்களும் வந்தார்,Vandhaar - வந்திரா நின்றார்கள்; நான்,Naan - நானும் அடைக்காய்,Adaikkai - (அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை திருத்தி வைத்தேன்,Thiruthi Vaithen - ஆய்ந்து வைத்திருக்கிறேன். |