திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 14 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
14பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்) 2
ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார் நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார் பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.–1-1-2
பதவுரை Show / Hide
ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்,Oduvaar - (ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்,Vizhuvaar - (சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து,Ugandhu - உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்,Aalipaar - கோஷிப்பாரும்
நாடுவார்,Naaduvaar - (பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்,Nam piraan - நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்,Engu thaan enbaar - எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்,Paaduvaargalum - பாடுவார்களும்
பல் பறை,Pal parai - பலவகை வாத்யங்கள்
கொட்ட,Kotta - முழங்க
நின்று,Nindru - அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்,Aaduvaargalum - கூத்தாடுவாருமாக
ஆயிற்று,Aayitru - ஆய்விட்டது.