| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 140 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 2 | வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன் கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2 | நண்ணி தொழுமவர்,Nanni Thozhumavar - கிட்டி வணங்குகின்றவர்களுடைய சிந்தை,Sindhai - மநஸ்ஸில் நின்றும் பிரியாத,Priyaadha - விட்டு நீங்காத நாராயணா,Narayana - நாராயணனே! வண்ணம்,Vannam - (நீ) (மிக்க செந்) நிறத்தையுடைய பவளம்,Pavalam - பவழ வடத்தை மருங்கினில்,Marunginil - திருவரையிலே சாத்தி,Saathi - சாத்திக் கொண்டு மலர்,Malar - தாமரை மலர் போன்ற பாதம்,Paadham - பாதங்களிலணிந்த கிண் கிணி,Kin Kini - சதங்கை ஆர்ப்ப,Aarpa - ஒலிக்கும்படி இங்கே வாராய்,Inge Vaarai - (நீ) இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே,Ennarukku Ariya Piraane - (உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு) நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே! திரியை,Thiriyai - நூல் திரியை எரியாமே,Eriyaame - எரிச்சலுண்டாகாதபடி காதுக்கு,Kaadhukku - (உன்) காதுகளுக்கு இடுவன்,Iduvan - இடுவேன்; கண்ணுக்கு நின்றும் அழகு உடைய,Kannukku Nindrum Azhagu Udaiya - (அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான) கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான) கனகம் கடிப்பும்,Kanagam Kadippum - பொற் கடிப்பும் இவை,Ivai - இவையாகும்; ஆ,Aa - ஆச்சர்யம். |