| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 141 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 3 | வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன் வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன் உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3 | உய்ய,Uyya - (நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி இ ஆயர் குலத்தினில் தோன்றிய,E Aayar Kulathinil Thondriya - இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த ஒன் சுடர்,On Sudar - மிக்க ஒளியையுடைய ஆயர் கொழுந்தே,Aayar Kozhundhe - இடையர்களின் கொழுந்து போன்றவனே! வையம் எல்லாம் பெறும்,Vaiyam Ellaam Perum - இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய வார் கடல் வாழும் மகரம் குழை,Vaar Kadal Vaazhum Magaram Kuzhai - பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை கொண்டு வைத்தேன்,Kondu Vaithen - (உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்; வெய்யவே,Veyyave - (உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு) வெம்மை யுடனிருக்கும் படி காதில் திரியை இடுவன்,Kaadhil Thiriyai Iduvan - (உன்) காதிலே திரியை இடுவேன்; வேண்டியது எல்லாம்,Vendiyathu Ellaam - நீ விரும்பிய பொருள்களை யெல்லாம் தருவன்,Tharuvaan - கொடுப்பேன்; மாதவனே,Madhavane - ச்ரியபதியே! இன ஆய்ச்சியர் உள்ளத்து,Ina Aaychiyar Ullathu - மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே மையன்மை செய்து,Maiyanmai Seidhu - வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு இங்கே வாராய்:-.,Inge Vaarai - இங்கே வாராய். |