திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 142 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
142பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 4
வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4
பதவுரை Show / Hide
இ கோபாலர் பிள்ளைகள், E Gopalar Pillaiyar - இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது,Vaar Kaadhu - (தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி,Thaazha Perukki - (தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய,Vanam Nindru Udaiya - நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு,Vairam Kadippu - வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு,Ittu - அணிந்து கொண்டு
நன்று குணம் உடையர்,Nandru Gunam Udaiyar - (இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து) ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா,Govindha - கோவிந்தனே!
நீ,Nee - நீயோ வென்றால்
சொல்லு,Sollu - (தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்,Kollai - கேட்கிறாயில்லை;
இணை,Inai - (இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு) ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய,Nandru Azhagiya - மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு,I Kadippu - இக் கடிப்பை
இட்டால்,Ittaal - அணிந்து கொண்டால்
நான்,Naan - நான்
இனிய பலாப்பழம் தந்து,Iniya Palaappazham Thandhu - தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை,Sunam Nindru Ani Mulai - சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண,Unna - (நீ) பருகும்படி
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்;
பிரான்,Piraan - ஸ்வாமியே!
சோத்தம்,Soththam - (உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.,Inge Vaarai - இங்கே வாராய்.