திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 143 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 5 | சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5 | பதவுரை Show / Hideபிரான்,Piraan - தலைவனே! சோத்தம்,Soththam - உனக்கு ஓரஞ்ஜலி என்று,Endru - என்று சொல்லி இரந்தாலும்,Irandhaalum - (வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் கொள்ளாய்,Kollai - (நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை; நம்பீ,Nambi - பூர்ணனே! நீ,Nee - நீ சுரி குழலாரொடு,Suri Kuzhalarodhu - சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு போய்,Poi - (ஏகாந்த ஸ்தலத்திலே) போய் கோத்து,Kothu - கை கோத்து குரவை பிணைந்து,Kuravai Pinaindhu - குரவைக் கூத்தாடி இங்கு வந்தால் ;,Ingu Vandhaal - (பின்) இங்கே வந்தால் குணம் கொண்டிடுவனோ,Gunam Kondiduvano - (நீ அப்படி செய்ததை)(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ? பிரானே,Piraane - உபகாரகனே! திரி இட ஒட்டில்,Thiri Ida Otti - திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால் பேர்த்தும்,Perthum - மறுபடியும் மறுபடியும் பெரியன அப்பம்,Periyana Appam - பெரிய பெரிய அப்பங்களை தருவன்,Tharuvaan - கொடுப்பேன்; வேய் தட தோளார்,Vey Thada Tholar - மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர் விரும்பு,Virumbu - விரும்புகைக்கு உரிய கரு குழல் விட்டுவே,Karu Kuzhal Vittuve - கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே! (நீ இங்கே வாராய்).,Nee Inge Vaarai - நீ இங்கே வாராய் |