Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 144 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
144ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 6
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6
விண் எல்லாம் கேட்க,Vin Ellam Ketka - மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்,Azhuthittai - அழுதாய்;
நான்,Naan - (நீ அப்படி அழுகையில்) (தாயாகிய) நான்
விரும்பி,Virumbi - ஆதரங்கொண்டு
உன் வாயில்,Un Vaayil - உன் வாயிலே
அதனை,Adhanai - (நீ மண் உண்ட) அதை
நோக்கி,Nookki - பார்க்கும் போது
மண் எல்லாம் கண்டு,Man Ellam Kandu - (அவ் வாயில்) லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி,En Manathulle Anji - என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று,Madhusudane Endru - ‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன்;
புண் ஏதும் இல்லை,Pun Edhum Illai - (உன்னுடைய காதிலே) புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்,Un Kaadhu Mariyum - (கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
இறை போது,Irai Podhu - (அதை மாத்திரம்) க்ஷண காலம்
பொறுத்து இரு,Poruththu Iru - பொறுத்துக் கொண்டிரு;
நம்பி,Nambi - பூர்ணனே!
கண்ணா,Kanna - கண்ணனே!
கார் முகிலே,Kaar Mugile - காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா,Kadal Vannaa - கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே,Kaavalaney - ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.,En Mulai Unai - என் முலை உணாய்.