Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 146 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
146ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 8
என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8
என் குற்றமே என்று,En Kutrame Endru - (நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது) ‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்,Sollavum Venda Kaan - நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
நான் மண் உண்டேன் ஆக,Naan Man Unden Aaga - (ஏனெனில்;) நான் மண் உண்டதாகச் சொல்லி
என்னை,Ennai - (மண் திண்ணாத) என்னை
பிடித்தும்,Pidiththum - பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று,Anbu Utru - அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி,Nookki - (என் வாயைப்) பார்த்து
அடித்தும்,Adiththum - (என்னை) அடித்தும்
அனைவர்க்கும்,Anaivarkkum - எல்லார்க்கும்
காட்டிற்றிலையே,Kaattitrilaiye - காட்டின தில்லையோ?
வல் புற்று அரவின்,Val Putru Aravin - (என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை) வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை,Pagai - விரோதியான கருடனை
கொடி,Kodi - கொடியாக வுடைய
வாமந நம்பி,Vaamana Nambi - வாமந மூ­ர்த்தியே!
உன் காதுகள் தூரும்,Un Kaadhugal Thoorum - (இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்) உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
உற்றன,Uttrana - (உன்னை யடுத்தவர்கள்) அடைந்தனவான
துன்பு எல்லாம்,Thunbu Ellam - துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்,Theerppai - போக்குமவனே!
பிரானே,Piraane - உபகாரகனே!
திரி இட்டு,Thiri Ittu - (உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்,Meyye Sollugean - (உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன் (என்கிறாள். )