| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 148 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 10 | காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில் தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10 | காதுகள்,Kaadhugal - (என்னுடைய) காதுகள் வீங்கி,Veengi - வீங்கிப் போய் எரியில்,Eriyil - எரிச்சலெடுத்தால், காரிகையார்க்கும்,Kaarigaiyaarkkum - (பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும் உனக்கும்,Unakkum - (என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும் உற்ற(து),Uttrathu - நேரிட்டதான இழுக்கு,Ilukku - சேதம் என்,En - ஏதேனுமுண்டோ? (என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்) தாரியாது ஆகில்,Thaariyaadhu Aagil - (நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது) ('திரியை இடுவது) பொறாமற்போனால் தலை நொந்திடும் என்று,Thalai Nondhidum Endru - (குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து விட்டிட்டேன்,Vittitten - (முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன் குற்றமே அன்றே,Kutrame Andre - (அன்பினால் அப்படி விட்டிருந்தது) (என்னுடைய) குற்றமேயாமல்லவா? ஏர் விடை,Er Vidai - அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை செற்று,Setru - அழித்து இள கன்று,Ila Kanru - சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை எறிந்திட்ட,Erindhitta - (குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய இருடீகேசர்,Irudheekesar - ஹ்ருஷீகேசனே’ என்றன் கண்ணே,Endran Kanne - எனக்குக் கண் போன்றவனே’ சேரியில்,Seriyil - இவ் விடைச் சேரியில் பிள்ளைகள் எல்லாரும்,Pillaigal Ellarum - எல்லாப் பிள்ளைகளும் காது பெருக்கி,Kaadhu Perukki - காதைப் பெருக்கிக் கொண்டு திரியவும்,Thiriyavum - திரியா நிற்பதையும் காண்டி,Kaandi - நீ காணா நின்றாயன்றோ |