திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 15 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
15பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 3
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3
பதவுரை Show / Hide
சீர் உடை,Seer udai - ஸ்ரீமானான
பிள்ளை,Pillai - க்ருஷ்ணன்
பேணி,Peni - (கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்,Pirandhinil - பிறந்தவளவில்
தாம்,Thaam - ஆடிப்பாடி ஆயர்கள்
காண,Kaana - (கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்,Puguvaar - உள்ளே நுழைவாரும்
புக்கு,Pukku - உள்ளேபோய் (கண்டு)
போதுவார்,Poduvaar - வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்,Aan oppaar - ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்,Ivan ner - இவனோடு ஒத்திருப்பார்
இல்லை,Illai - (யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்,Thiru onathaan - ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு,Ulagu - விபூதிகளையெல்லாம்
ஆளும்,Aalum - ஆளக்கடவன்
என்பார்கள்,Enbaarghal - என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.