திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 16 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
16பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 4
உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார் நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4
பதவுரை Show / Hide
ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்,Aayar - இடையர்கள்
உறியை,Uriyai - (பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து,Mutrathu - முற்றத்திலே
உருட்டி நின்று,Urutti nindru - உருட்டிவிட்டு
ஆடுவார்,Aaduvaar - கூத்தாடுவார் சிலரும்,
நறு,Naru - மணம்மிக்க
நெய் பால்தயிர்,Ney paalthayir - நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக,Nandraaga - நிச்சேஷமாக
தூதுவார்,Thoothuvaar - தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்,Seri men - நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்,Koondhal - மயிர்முடியானது
அவிழ,Avizha - அவிழ்ந்து கலையும்படி
திளைத்து,Thilaiththu - நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்,Engum - சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்,Arivu azhindhanar - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.