Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 162 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
162ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 1
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1
அக்காக்காய்,Akkakkai - காக்கையே!
பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை,Manalanai - நாயகனும்
பேரில்,Peril - திருப் பேர்களிலே
கிடந்தானை,Kidandhanai - பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை,Munnai - (பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்,Amarar - நித்ய ஸுரிகளுக்கு
முதல்,Mudhal - தலைவனும்
தனி வித்தினை,Thani viththinai - (அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்,Ennaiyum - என்னையும்
எங்கள் குடி முழுது,Engal kudi muzhuvathu - எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட,Aad kond - அடிமை கொண்ட
மன்னனை,Mannanai - தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து,Vandhu - (நீ) வந்து
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்,Akkakkai - காக்கையே!
மாதவன் தன்,Madhavan than - ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக