திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 163 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
163பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2
பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2
பதவுரை Show / Hide
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
இவன்,Ivan - இப் பிள்ளை
முன்னம்,Munnam - முன்பு
பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை
உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை,Pillai - பிள்ளை காண்
மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள
சகடும்,Sagadum - சகடத்தையும்
மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்,Iruththavan - முறித்தவன்
காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை
வந்து,Vandhu - (நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக.
தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய்