திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 164 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
164பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3
திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3
பதவுரை Show / Hide
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
திரை,Thirai - பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
விழுங்கி,Vizhunki - உட் கொண்டு
விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமியும்
அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை,Perumanai - நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற
வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக