திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 165 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
165பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4
பதவுரை Show / Hide
அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே!
பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே
மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின்
உரு,Uru - ரூபத்தை
கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு
வருவான்,Varuvaan - வருபவனாகிய
கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை)
இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ,Pothukko - விரைவாக
வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய்