திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 166 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
166பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 5
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி யெறிந்த பரமன் திரு முடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5
பதவுரை Show / Hide
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
நீ,Nee - நீ
உற்றன,Uttrana - (உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி,Peshi - சொல்லிக் கொண்டு
ஓடி,Odi - அங்குமிங்கும் பறந்து
திரியாதே,Thiriyaadhe - திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து,Kanru inam meythu - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை,Oru kanrinai - (அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி,Patri - பிடித்து
கனிக்கு,Kanikku - (அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த,Erindha - (குணிலாக) வீசின
பரமன்,Paraman - பரம புருஷனுடைய
திருமுடி,Thirumudi - அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து,Attraiyum vandhu - அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக
ஆழியான் தன்,Azhiyan than - சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக