திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 167 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 6 | கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6 | பதவுரை Show / Hideஅக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கேடு இலாதார்,Kedu ilaadhaar - (வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான கிழக்கில் குடி மன்னரை,Kizhakkil kudi mannarai - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை அழிப்பான்,Azhippaan - அழிக்கும் படி நினைந்திட்டு,Ninaindittu - எண்ணி அவ் வாழி அதனால்,Av vaazhi athanaal - அந்தச் சக்ராயுதத்தால் விழிக்கும் அளவிலே,Vizhikkum alavile - கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள் வேர் அறுத்தானை,Ver arutthaanai - ஸ மூலமாக அழித்தவனுடைய குழற்கு,Kuzharku - கூந்தலுக்கு அணி ஆக,Ani aaga - அழகு உண்டாம்படி குழல் வாராய் கோவிந்தன்,Govindan - (இந்த) கோவிந்தனுடைய தண் குழல்,Than kuzhal - குளிர்ந்த (சிறந்த) குழலை வாராய்,Vaarai - வாருவாயாக. |