| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 168 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 7 | பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகமர் வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! பிண்டம் திரளையும்,Pindam thiralaiyum - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும் பேய்க்கு இட்ட,Peykku itta - பிசாசங்களுக்குப் போகட்ட நீர் சோறும்,Neer sorum - நீரையுடைய சோற்றையும் உண்டற்கு,Undarkku - உண்ணுதற்கு வேண்டி,Vendi - விரும்பி நீ ஓடி திரியாதே,Nee odi thiriyadhe - நீ பறந்தோடித் திரியவே வேண்டா அண்டத்து,Andathu - மேலுலகத்திலுள்ள அமரர்,Amarar - தேவர்களுக்கு பெருமான்,Perumaan - தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய அழகு அமர்,Azhagu amar - அழகு பொருந்திய வண்டு ஒத்து இருண்ட,Vandu othu irunda - வண்டைப் போல் கருநிறமான குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக மாயவன் தன்,Maayavan than - ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |