| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 169 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 8 | உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! உந்தி,Undhi - (தனது) திருநாபியிலே எழுந்த,Ezhntha - உண்டான உருவம்,Uruvam - ஸுருபத்தையுடைய மலர் தன்னில்,Malar thannil - தாமரைப் பூவிலே சந்தம்,Sandham - சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய சதுமுகன் தன்னை,Sathumugan thannai - நான்முகனை படைத்தவன்,Padaithavan - ஸ்ருஷ்டித்த இவனுடைய புளி அட்டி கொந்தம் குழலை,Puli atti kondham kuzhalai - புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை தந்தத்தின் சீப்பால்,Thandathin seepal - தந்தத்தினாற் செய்த சீப்பாலே குறந்து,Kurandhu - சிக்கு விடுத்து குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-,Akkakkai - (இந்த) தாமோதரனுடைய குளிர்ந்த (சிறந்த) குழலை வாருவாயாக. |