| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 170 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 9 | மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய் பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! முன்,Mun - வாமநாவதார காலத்தில் மன்னன் தன்,Mannan than - அஸுரராஜனான மஹாபலியினுடைய தேவிமார்,Devimaar - மனைவியர்கள் கண்டு,Kandu - (தன்னுடைய) வடிவைக் கண்டு மகிழ்வு எய்த,Magizhvu aiththa - மகிழ்ச்சி யடையும்படி இ உலகினை முற்றும், E ulakini mutrum - (மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) இந்த வுலகங்கள் முழுவதையும் அளந்தவன்,Alandhavan - அளந்து கொண்ட இவனுடைய பொன் முடியினை,Pon mudhiyinai - அழகிய தலையை பூஅணை மேல் வைத்து,Pooanai meel vaiththu - புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து பின்னே இருந்து,Pinne irundhu - (இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு குழல் வாராய்,Kuzhal vaarai - அக்காக்காய்!- பேர் ஆயிரத்தான்,Per aayiraththaan - ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |